வீடு / சமையல் குறிப்பு / மட்டன் சுக்கா

Photo of Mutton sukka by sudha rani at BetterButter
414
0
0.0(0)
0

மட்டன் சுக்கா

Feb-28-2019
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மட்டன் சுக்கா செய்முறை பற்றி

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மட்டன் 3/4 கிலோ
  2. சின்ன வெங்காயம் 150 கிராம்
  3. தக்காளி 2
  4. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  5. பச்சை மிளகாய் 3
  6. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  7. சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
  8. மல்லித்தூள் 1/2 ஸ்பூன்
  9. கறிமசால் தூள் 2 ஸ்பூன்
  10. மிளகுத்தூள் 1 ஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. கறிவேப்பிலை சிறிது
  13. கொத்தமல்லி தழை சிறிது
  14. எண்ணெய் 8 டேபிள்ஸ்பூன்
  15. பட்டை 2
  16. கிராம்பு 2
  17. ஏலக்காய் 2
  18. பிரியாணி இலை 2
  19. கடுகு 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து வெடிக்க விடவும்
  2. பின் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  4. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  5. பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
  6. பின் சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கிய மட்டன் சேர்த்து வதக்கவும்
  7. பின் தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்
  8. பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேக வைக்கவும்
  9. தண்ணீர் நன்கு சுண்டி வற்றி வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்