வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் மசாலா தோசை

Photo of Paneer masala dosai by hajirasheed haroon at BetterButter
2
0
0.0(0)
0

பன்னீர் மசாலா தோசை

Feb-28-2019
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் மசாலா தோசை செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தோசை மாவு ஒரு கப்
  2. எண்ணெய் தேவையான அளவு
  3. பன்னீர் மசாலா செய்ய தேவையான பொருட்கள்
  4. பன்னீர் 50 கிராம்
  5. வெங்காயம் 2
  6. இஞ்சி பூண்டு விழுது அரை ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  8. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  9. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  10. சோயா சாஸ் 1 டேபிள்ஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பன்னீர் மசாலா செய்வதற்கு பன்னீரை பொடியாக துருவிக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  3. பிறகு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும்
  4. சோயா சாஸ் ஊற்றி கிளறவும்
  5. பொடித்த பன்னீரை அதனுடன் சேர்த்து சிறிது நேரம் கிளறி விடவும்
  6. பன்னீர் மசாலா தயார்
  7. தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் தோசையாக ஊற்றி வேக விடவும்
  8. எண்ணெய் ஊற்றி செய்து வைத்துள்ள பன்னீர் மசாலாவை வைத்து சிறிது நேரம் மூடி வைத்து வேக விடவும்
  9. சுவையான பனீர் மசாலா தோசை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்