வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் சாதம்

Photo of Vegtable satham by hajirasheed haroon at BetterButter
285
1
0.0(0)
0

வெஜிடபிள் சாதம்

Feb-28-2019
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் சாதம் செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம் 6
  2. புழுங்கலரிசி 5 கப்
  3. தக்காளி நான்கு
  4. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  5. கேரட் 2
  6. பீன்ஸ் கால் கிலோ
  7. பச்சை பட்டாணி ஒரு கப்
  8. ஸ்வீட் கார்ன் ஒரு கப்
  9. சோயா 20
  10. புதினா மல்லி இலை ஒரு கப்
  11. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  12. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  13. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  14. பிரியாணி மசாலா பவுடர் ஒரு டீஸ்பூன்
  15. தயிர் அரை கப்
  16. தாளிப்பதற்கு பட்டை ஏலக்காய் கிராம்பு தலா 4
  17. எண்ணெய் 200 மில்லி
  18. உப்பு தேவையான அளவு
  19. 10 கப் தண்ணீர்

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளி காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. அரிசியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்
  3. ஒரு பெரிய சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்
  4. வெங்காயம் வதங்கியதும் அதில் நறுக்கிய காய்கறிகள் உப்பு சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்
  5. மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் பிரியாணி மசாலா தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும்
  6. தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  7. தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்த அரிசியை சேர்த்து வேக விடவும்
  8. சாதம் முக்கால் பாகம் வெந்தவுடன் சிறிது நேரம் தம்மிழ் வைத்து பரிமாறலாம் சுவையான வெஜிடபிள் சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்