வீடு / சமையல் குறிப்பு / காளிபிளவர் பிரைஸ் (கிரேவி)

Photo of Califlower fries gravey by Balajayasri Dhamu at BetterButter
359
0
0.0(0)
0

காளிபிளவர் பிரைஸ் (கிரேவி)

Feb-28-2019
Balajayasri Dhamu
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காளிபிளவர் பிரைஸ் (கிரேவி) செய்முறை பற்றி

காளிபிளவர் பயன்படுத்தி செய்வது... ரோட்டு கடைகளில் மிகவும் பிரபலமான இந்த ரெசிபி வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செய்யலாம்..

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. காலிப்ளவர் 1
  2. கான்பிளவர்மாவு 3ஸ்பூன்
  3. கடலை மாவு2ஸ்பூன்
  4. அரிசி மாவு1ஸ்பூன்
  5. மிளகாய் தூள் 1ஸ்பூன்
  6. கரம் மசாலா1ஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு விழுது3ஸ்பூன்
  8. எண்ணெய் பொரித்தெடுக்க
  9. வரகொத்தமல்லி1/2ஸ்பூன்
  10. மிளகு1/2ஸ்பூன்
  11. சோம்பு1/2ஸ்பூன்
  12. சிரகம்1/2ஸ்பூன்
  13. இஞ்சி சிறு துண்டு
  14. பூண்டு 4
  15. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  16. பச்சை மிளகாய்1

வழிமுறைகள்

  1. காளிபிளவர் முதலில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்
  2. 10நிமிடம் இதை நிரில் போட்டு வைக்க வேண்டும்
  3. பின்னர் நிரை வடித்து கொண்டு அவற்றை கான்பிளவர் மாவு, கடலைமாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கொள்ள வேண்டும்
  4. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
  5. கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
  6. பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து 10 நிமிடம் மூடி வைக்கவும்
  7. பின்னர் எண்ணெய் காய்ந்ததும் பொரித்து எடுக்கவும்
  8. இப்போது வறுத்த காளிபிளவர் ரெடி
  9. இப்போது சிரகம், சோம்பு, கொத்தமல்லி, மிளகு, இஞ்சி, பூண்டு நன்கு வறுத்து அரைத்து கொள்ளவும்
  10. இப்போது வாணலியில் அரிந்த வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
  11. பின்னர் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்
  12. கான்பிளவர் மாவு கரைத்து சேர்த்து கொள்ள வேண்டும்
  13. பின்னர் கரம் மாசாலா, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கொள்ள வேண்டும்
  14. பின்னர் காளிபிளவர் துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
  15. பின்னர் நன்கு கலந்து கொண்டு கொதிக்க வைத்து சற்று வதங்கியதும் இறக்கவும்
  16. தேவை என்றால் 1/2ஸ்பூன்கான்பிளவர் மாவு கரைத்த தண்ணீர் ஊற்றி கொள்ள வேண்டும்
  17. இப்போது சுவையான சத்தான காளிபிளவர் பிரைஸ் (கிரேவி) ரெடி
  18. தட்டில் பரிமாறி வெங்காயம் மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்
  19. கார்ன் அல்லது முறுக்கு தூள் செய்து மேலே தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்