வீடு / சமையல் குறிப்பு / ரவா கேசரி , உளுந்து வடை

Photo of Sooji kesari, uraddal vada by Ilavarasi Vetri Venthan at BetterButter
13
0
0.0(0)
0

ரவா கேசரி , உளுந்து வடை

Mar-02-2019
Ilavarasi Vetri Venthan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரவா கேசரி , உளுந்து வடை செய்முறை பற்றி

ரவா கேசரி 1. ரவை – 1/2 கப் 2. சர்க்கரை – 1 கப் 3. தண்ணீர் – 1 1/2 கப் 4.கேசரி பவுடர் – 2 சிட்டிகை 5. நெய் – 4 -5 ஸ்பூன் 6. முந்திரி – 8 - 10 7.ஏலக்காய் பவுடர் – 1/2 ஸ்பூன் 8. உலர்திராட்சை - 5 - 7 செய்முறை; 1.முதலில் காடாயில் 1 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி பருப்பு, உலர்திராட்சை பொன் நிறமாக வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். 2.அதே நெய் காடாயில் ரவையை 4 நிமிடத்திற்கு மனம் வரும்வரை மிதமான தீயில் பொன் நிறமாக வறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். 3.காடாயில் 2 கப் தண்ணீர் , 2 சிட்டிகை கேசரி பவுடர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். 4.அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதித்த நீரில் ரவையை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கட்டி இல்லாமல் கிளரவும். 5 நிமிடம் மூடி வைத்து வேக விடவும். 5.இப்பொழுது சர்க்கரை சேர்த்து கரையும் வரை கிளரவும். நெய், ஏலக்காய் பவுடர் சேர்த்து கிளரவும். 6.அகலமான பாத்திரத்தில் சிறுது நெய் தடவி கேசரியை கொட்டாவும். முந்திரி, திராட்சை தூவி பரிமாறவும். உளுந்து வடை தேவையான பொருட்கள் 1.வெள்ளை உளுந்து – 1 கப் 2.சின்ன வெங்காயம் – 50 கிராம் 3.பச்சை மிளகாய் – 2 4.இஞ்சி – ஒரு சிறிய துண்டு 5.கொத்தமல்லி - 2 ஸ்பூன் (நறுக்கியது ) 6.பெருங்காயம் – 3 சிட்டிகை 7.கருவேப்பிலை – சிறிதளவு 8.எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: 1. உளுந்தை, 3 மணி நேரம் ஊறவைக்கவும்.தண்ணீரை வடித்து, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து, குளிர்ந்த நீரை சிறிது சிறிதாபார்த்துக்கொள்ளவும். தண்ணீர் அதிகம் சேர்க்காமல் தெளித்து அர்ரக்கவும். 2. வழு வழுப்பான மாவாக அரைபட்டவுடன், வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை மூன்றையும் பொடியாக நறுக்கி சேர்க்கவும்.உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 3. கடாயில் எண்ணெய் காய வைக்கவும். 4.வடை மாவு கெட்டியாக இருக்க வேண்டும். கைகளில் தண்ணீர் தடவி, ஒரு பெரிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து உருட்டி, கட்டை விரலால் ஓட்டையிட்டு, எண்ணெய்யில் கவனமாக போடவும். வாழை இலையில் தண்ணீர் தடவி தட்டியும் போடலாம். 5. பொன்னிறமாக ஒரு புறம் சிவந்ததும், மறுபுறம் திருப்பிவிட்டு, பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். தீயை அவ்வப்பொழுது குறைத்து, எண்ணெய் புகையாமல் பார்த்துக்கொள்ளவும்.

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவை

வழிமுறைகள்

  1. ரவா கேசரி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்