வீடு / சமையல் குறிப்பு / முட்டை கொத்து பிரட்

Photo of Egg Brunch Bread by Bena Aafra at BetterButter
389
1
0.0(0)
0

முட்டை கொத்து பிரட்

Mar-03-2019
Bena Aafra
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முட்டை கொத்து பிரட் செய்முறை பற்றி

தெரு கடை உணவு என்பது அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும்.பிரட் -ஐ வைத்து பலவிதமான உணவு தயாரிக்கலாம். இன்று நாம் முட்டை கொத்து பிரட் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை -2
  2. பிரட் -2
  3. மிளகு தூள் -1/3டீஸ்பூன்
  4. உப்பு -தேவைக்கேற்ப
  5. மிளகாய் தூள் -1/4டீஸ்பூன்
  6. மஞ்சள் தூள் -ஒரு சிட்டிகை
  7. வெங்காயம் -1(பொடியாக நறுக்கியது )
  8. கறிவேப்பிலை -சிறிது
  9. பச்சை மிளகாய் -2(பொடியாக நறுக்கியது)
  10. கொத்தமல்லித்தழை-சிறிது
  11. வெண்ணெய் -1ஸ்பூன்
  12. சீஸ்-துருவியது
  13. தக்காளி -1(பொடியாக நறுக்கியது )

வழிமுறைகள்

  1. ஒரு பௌலில் முட்டை எடுத்து மிளகு தூள், உப்பு சேர்த்து அடித்து கொள்ளவும்.
  2. தவாவில் வெண்ணெய் விட்டு அடித்து வைத்துள்ள முட்டையை சேர்க்கவும் அதன் மேல் இரண்டு பிரட்டை வைத்து வேக விடவும்.
  3. பிரெட் ஆம்லெட் தயார் ஆனதும் எடுத்து வைக்கவும்.
  4. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ,கறிவேப்பிலை, பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  5. மற்றொரு தவாவில் வெண்ணெய் விட்டு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சேர்த்து நன்றாக வதக்கவும்.
  6. நன்றாக வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்க்கவும்.
  7. மஞ்சள்தூள் ,மிளகாய் தூள் சேர்க்கவும்
  8. நன்றாக வதங்கியதும் பிரெட் ஆம்லெட் நன்றாக உதிர்த்து விட்டு நன்றாக கொத்தி விடவும்.
  9. கரண்டி அல்லது ஒரு டம்ளரை வைத்து நன்றாக கொத்தி விடவும்.
  10. அதனுடன் சீஸ் சேர்த்து நன்றாக கொத்தி விட்டு கடைசியாக கொத்தமல்லி இலை, தூவி இறக்கவும்
  11. சுவையான முட்டை கொத்து பிரட் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்