Photo of Tawa Idli Using Leftover Idli by Menaga Sathia at BetterButter
438
1
0.0(0)
0

தவா இட்லி

Mar-06-2019
Menaga Sathia
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

தவா இட்லி செய்முறை பற்றி

ஹைதையில் இந்த தவா இட்லி மிக பிரபலம்.முகநூலில் தோழி ஒருவரிடம் இந்த ரெசிபி கேட்டு செய்தது.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்து விட்டது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஆந்திரப்ரதேஷ்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. மீதமான இட்லி -4
  2. வெங்காயம்-1, பொடியாக நறுக்கியது
  3. தக்காளி -1,பொடியாக நறுக்கியது
  4. உப்பு-தேவைக்கு
  5. வெண்ணெய் -3 டேபிள் ஸ்பூன்
  6. கொத்தமல்லி தழை -1 டேபிள் ஸ்பூன்,பொடியாக நறுக்கியது
  7. வரமிளகாய்தூள் -2 டீஸ்பூன்
  8. இட்லி பொடி-1 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய், வெங்காயம், இட்லி பொடி,வரமிளகாய்தூள் சேர்த்து வதக்கவும்.
  2. பின் தக்காளி,1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்,உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்.
  3. நன்றாக வதங்கி,பச்சை வாடை அடங்கியதும் இட்லியை பரவலாக வைக்கவும்.
  4. மசாலாவை இட்லியின் இருபக்கமும் நன்கு ஒட்டுமாறு தடவவும்.
  5. பின் மீதமுள்ள வெண்ணெய், கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
  6. சூடாக தேங்காய்த் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்