Photo of Egg peas masala by Sanjeetha Sanjeetha at BetterButter
352
3
4.0(1)
0

Egg peas masala

Mar-07-2019
Sanjeetha Sanjeetha
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெள்ளை பட்டாணி வேகவைத்தது 1/2 கப்
  2. வேகவைத்த முட்டை 1
  3. பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது 2
  4. தக்காளி பொடியாக நறுக்கியது 1
  5. பூண்டுப்பல் நசுக்கியது 4
  6. சோம்பு 1/2 மேஜைக்கரண்டி
  7. கடுகு 1/2 மேஜைக்கரண்டி
  8. பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது 1
  9. இஞ்சி பூண்டு விழுது 1/2 மேஜைக்கரண்டி
  10. மிளகாய் தூள் 1/2 மேசைக்கரண்டி
  11. கரம் மசாலா 1/2 மேஜைக்கரண்டி
  12. மஞ்சள் தூள் 1/4மேஜைக்கரண்டி
  13. மல்லித் தூள் 1 மேசைக்கரண்டி
  14. மல்லி இலை பொடியாக நறுக்கியது சிறிதளவு
  15. மாங்காய் துண்டுகள் பொடியாக நறுக்கியது சிறிதளவு
  16. சமையல் எண்ணை 4 மேஜைக்கரண்டி
  17. கருவேப்பிலை சிறிதளவு
  18. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் 4 ஸ்பூன் அளவு எண்ணெயை ஊற்றவும்
  2. என்னை காய்ந்தபின் அதில் அரை மேசைக்கரண்டி கடுகு சேர்க்கவும்
  3. அரை மேசைக்கரண்டி சோம்பு சேர்க்கவும்
  4. நசுக்கிய பூண்டு பற்களை சேர்க்கவும்
  5. இவை அனைத்தும் பொரிந்ததும் நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று சேர்க்கவும்
  6. பெரிய வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது அரை மேஜைக்கரண்டி சேர்க்கவும்
  7. வதங்கிய பின் நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்
  8. தக்காளி நன்றாக வதங்கிய பின் அதில் மசாலாக்களை சேர்க்கவும்
  9. மசாலா வதங்கிய பின் அதில் வேகவைத்த பட்டாணியை சேர்க்கவும்
  10. இதில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
  11. ஐந்து நிமிடம் நன்றாக கொதித்த பின் அதில் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்
  12. அலங்கரிக்க வேகவைத்த முட்டைகளை பொடியாக நறுக்கி அதில் சேர்க்கவும்
  13. நறுக்கிய மாங்காய் துண்டுகளையும் மல்லி இலைகளையும் தூவி சுவையாக பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Rabia Hamnah
Mar-07-2019
Rabia Hamnah   Mar-07-2019

So yummy

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்