வீடு / சமையல் குறிப்பு / காலிஃப்ளவர் சில்லி

Photo of Cauliflower chilly by josina vinish at BetterButter
409
0
0.0(0)
0

காலிஃப்ளவர் சில்லி

Mar-07-2019
josina vinish
12 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காலிஃப்ளவர் சில்லி செய்முறை பற்றி

மிகவும் சுலபமாக சமைக்கக்கூடிய உணவு வகை இது.... எல்லோருக்கும் பிடித்தமான காலிஃப்ளவர் சில்லி எப்படி சமைப்பது என பார்க்கலாம்...

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. காலிஃப்ளவர் 2 கப்
  2. மைதா 3 டீஸ்பூன்
  3. கான்பிளவர் மாவு 3 டீஸ்பூன்
  4. மிளகாய்த்தூள்-3 டீஸ்பூன்
  5. தயிர் 2 டீஸ்பூன்
  6. கரம் மசாலா 1 டீஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
  8. மஞ்சள் தூள் சிறிதளவு
  9. சிவப்பு நிற ஃபுட் கலர் சிறிதளவு
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
  12. கறிவேப்பிலை 2 தண்டு
  13. பச்சை மிளகாய் 4

வழிமுறைகள்

  1. 1.முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் எடுத்து அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு கொதிக்க விடவும்
  2. 2.நீர் கொதித்த பின் அடுப்பை அணைக்கவும்.. கொதித்த நீரில் எடுத்துவைத்திருக்கும் 2 கப் காலிஃப்ளவரை போட்டு பத்து நிமிடம் வைக்கவும்
  3. 3.10 நிமிடம் கழித்து ஒரு பாத்திரத்தில் மேல் குறிப்பிட்ட எல்லா மசாலாக்களையும் காலிஃப்ளவர் உடன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்
  4. 4.பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காலிஃப்ளவர் ஒவ்வொன்றாக எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  5. இறுதியாக இரண்டு தண்டு கறிவேப்பிலை மற்றும் 4 அல்லது 5 இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய் எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து அதை காலிஃப்ளவர் சில்லி யின் மேல் போடவும் இது காலிஃப்ளவர் சில்லிக்கு தனி சுவையும் மணமும் கொடுக்கும். இப்போது சூடான சுவையான காலிஃப்ளவர் சில்லி ரெடி.......

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்