வீடு / சமையல் குறிப்பு / பட்டாணி சுண்டல் சாட்

Photo of Peas Sundal chhat by Deepa Srivatsan at BetterButter
341
0
0.0(0)
0

பட்டாணி சுண்டல் சாட்

Mar-10-2019
Deepa Srivatsan
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பட்டாணி சுண்டல் சாட் செய்முறை பற்றி

பட்டாணியில் செய்யப்படும் சாட் மிகவும் சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பட்டாணி 300 கிராம்
  2. உருளைக்கிழங்கு 2 வேக வைத்து மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்
  3. பெரிய வெங்காயம் 4
  4. தக்காளி 2 ( பொடியாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்)
  5. பூண்டு 6 பல்
  6. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  7. காரப்பொடி முக்கால் ஸ்பூன்
  8. கரம் மசாலா அரை ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. ஓமப் பொடி 50 கிராம்
  12. கொத்தமல்லி இலை ஒரு சிறிய கட்டு(பொடியாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்)
  13. எண்ணெய் 4 ஸ்பூன்
  14. எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பட்டாணியை காலையில் 5 மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்து குக்கரில் நன்றாக வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
  2. இரண்டு வெங்காயத்தை நீளவாக்கிலும் இரண்டு வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி நீளமாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்க வேண்டும்
  4. மூன்று நிமிடம் கழித்து நறுக்கி வைத்துள்ள தக்காளியைப் போட்டு நன்றாக வதக்க வேண்டும். சிறிது மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.
  5. இஞ்சி பூண்டை நைசாக மிக்ஸியில் அரைத்து அதனுடன் சேர்க்கவேண்டும். உப்பு காரப் பொடி மற்றும் கரம் மசாலா தூள் சேர்க்க வேண்டும்
  6. அதன்பின் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை அதனுடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
  7. 10 நிமிடம் வரை நன்றாக ஒன்றாக வதக்க வேண்டும் அதன் பின் வேக வைத்துள்ள பட்டாணியை அதனுடன் சேர்க்கவேண்டும் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்
  8. நன்றாக கொதி வந்து பச்சை வாசனை போனதும் கொத்தமல்லி இலை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பை அணைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்