வீடு / சமையல் குறிப்பு / திண்டுக்கல் ஃபேமஸ் ரோட்டுக்கடை மிளகு ஈரல் வறுவல்

Photo of Dindigul Famous Roadside spicy liver fry by Bena Aafra at BetterButter
467
1
0.0(0)
0

திண்டுக்கல் ஃபேமஸ் ரோட்டுக்கடை மிளகு ஈரல் வறுவல்

Mar-10-2019
Bena Aafra
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
59 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

திண்டுக்கல் ஃபேமஸ் ரோட்டுக்கடை மிளகு ஈரல் வறுவல் செய்முறை பற்றி

மிளகு ஈரல் வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஈரல்-1/4கிலோ
  2. பட்டை-2
  3. ஏலக்காய் -2
  4. வரமிளகாய் -2
  5. உப்பு-தேவைக்கேற்ப
  6. நல்லெண்ணெய் -2ஸ்பூன்
  7. வெங்காயம்-3
  8. பூண்டு(துருவியது)-1
  9. இஞ்சி(துருவியது)-சிறிய துண்டு
  10. தக்காளி-1
  11. பச்சைமிளகாய்-2
  12. மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
  13. மிளகாய் தூள்-1/4டீஸ்பூன்
  14. கறிவேப்பிலை
  15. கொத்தமல்லிதழை
  16. மிளகுதூள்

வழிமுறைகள்

  1. ஈரல் நன்றாக சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் குக்கர்வைத்து எண்ணெய்விட்டு பட்டை,ஏலம்,வரமிளகாய் சேர்த்து தாலிக்கவும்.
  3. ஈரல் சேர்த்து கிளறவும்.
  4. உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து கிளறிவிடவும்.
  5. சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைத்து 5அல்லது 6 விசில் விட்டு இறக்கிக்கொள்ளவும்.
  6. பொடியாக நறுக்கிய வெங்காயம்,பூண்டு,இஞ்சி துருவிக்கொள்ளவும்,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை,கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  7. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம்,இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும்.
  8. பச்சைமிளகாய்,கறிவேப்பிலை சேர்க்கவும்.
  9. உப்பு,மஞ்சள்தூள்,மிளகாய்தூள் சேர்த்து வதக்கவும்.
  10. தக்காளி சேர்த்து வதக்கவும் .
  11. வேகவைத்த ஈரலை சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
  12. அதனுடன் மிளகு தூள் சேர்த்து சுருள கிண்டி கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
  13. சுருள கிண்டிவிட்டு கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும் .
  14. ஒரு சிறிய பௌலில் மாற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்