வீடு / சமையல் குறிப்பு / மட்டன் கொத்துக்கறி ஹலீம்

Photo of Mutton keema Haleem by Bena Aafra at BetterButter
19
1
0.0(0)
0

மட்டன் கொத்துக்கறி ஹலீம்

Mar-10-2019
Bena Aafra
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
135 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மட்டன் கொத்துக்கறி ஹலீம் செய்முறை பற்றி

வடநாட்டுப் பாரம்பரிய உணவுகளில் ஒன்று.இஸ்லாமியர்கள் ரமளானில் அதிகமாக செய்யக்கூடிய ஒன்று .

செய்முறை டாக்ஸ்

 • மீடியம்
 • ஹைதராபாத்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. கறி வேகவைப்பதற்கு::
 2. கறி கைமா-250கிராம்
 3. பச்சைமிளகாய்-4
 4. இஞ்சிபூண்டு விழுது-1ஸ்பூன்
 5. மஞ்சள்தூள்-1/2டீஸ்பூன்
 6. பட்டை-3
 7. ஏலக்காய் -3
 8. கிராம்பு-2
 9. சோம்பு-1டீஸ்பூன்
 10. மிளகு -1டீஸ்பூன்
 11. உப்பு -தேவைக்கேற்ப
 12. தண்ணீர் -100மி.லி
 13. பருப்புக் கலவை செய்வதற்கு::
 14. உடைத்த கோதுமை-1/4கப்
 15. உளுந்து -1டீஸ்பூன்
 16. துவரம்பருப்பு-1டீஸ்பூன்
 17. கொண்டைக்கடலை-1டீஸ்பூன்
 18. பாசிப்பருப்பு -1டீஸ்பூன்
 19. அரிசி-1டீஸ்பூன்
 20. உப்பு -தேவைக்கேற்ப
 21. தண்ணீர் -2கப்
 22. வதக்குவதற்கு::
 23. எண்ணெய் -2ஸ்பூன்
 24. பொடியாக நறுக்கிய வெங்காயம் -3
 25. இஞ்சிபூண்டு விழுது-1ஸ்பூன்
 26. கொத்தமல்லித்தழை
 27. புதினா
 28. பச்சைமிளகாய்-2
 29. மிளகு தூள்-1/4டீஸ்பூன்
 30. மஞ்சள் தூள்-1/4டீஸ்பூன்
 31. தயிர் -1கப்
 32. நெய் -4ஸ்பூன்
 33. அலங்கரிக்க ::
 34. கொத்தமல்லி
 35. வெங்காயம்
 36. எலுமிச்சை

வழிமுறைகள்

 1. கறிவேகவைப்பதற்கு::
 2. குக்கரில் மட்டன் கொத்துக்கறி பச்சை மிளகாய் ,இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
 3. மிளகு, சோம்பு,கிராம்பு, பட்டை ,ஏலம் , மஞ்சள் தூள்,உப்பு சேர்க்கவும் .
 4. உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 7 அல்லது 8விசில் விட்டு வேகவைக்கவும்.
 5. மற்றொரு குக்கரில் உடைத்த கோதுமை,உளுந்து,கொண்டைக்கடலை,பாசிப்பருப்பு,துவரம்பருப்பு ,மற்றும் ,அரிசி சேர்க்கவும் .
 6. உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
 7. வேகவைத்த மட்டன் கொத்துக்கறியையும்,பருப்புக் கலவையையும் தனிதனியாக மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
 8. மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 9. இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் மற்றும் புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
 10. மஞ்சள் தூள்,மிளகு தூள் சேர்க்கவும்.
 11. தயிர் சேர்க்க வேண்டும்.
 12. உப்பு பார்த்து சேர்த்து கொள்ளவும்.
 13. அரைத்து வைத்துள்ள மட்டன் மற்றும் பருப்புக் கலவையை சேர்த்து கிளறவும் .
 14. அடுப்பை. சிம்மில் வைத்துக்கொள்ளவும் .
 15. அடிப்பிடிக்காமல் கிளறிவிடவும்.
 16. நெய் சேர்த்து கிளறி விட்டு மூடி வைத்து தம்மில் போடவும் .
 17. சிறிது நேரம் சென்று அடுப்பை அமத்தவும்.
 18. மட்டன் கைமா ஹலீம் தயார் .
 19. ஒரு பௌலில் மாற்றி பொரித்த வெங்காயம்,கொத்தமல்லி தூவி எலுமிச்சை வைத்து பரிமாறவும் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்