வீடு / சமையல் குறிப்பு / பாய்கடை பிரியாணி

Photo of Bhaikadai Biriyani by Nazeema Banu at BetterButter
261
2
0.0(0)
0

பாய்கடை பிரியாணி

Mar-11-2019
Nazeema Banu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பாய்கடை பிரியாணி செய்முறை பற்றி

ரோட்டுக்கடை உணவுகளில் பிரதானமான சுவையுடையது பாய்கடை பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பாச்சிலர்ஸ்
  • சௌத்இந்தியன்
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாஸ்மதி அரிசி 4கப்
  2. சிக்கன் ஒரு கிலோ
  3. இஞ்சி பூண்டு விழுது அரைகப்
  4. பெ.வெங்காயம் 6
  5. தக்காளி 6
  6. பட்டை 6
  7. ஏலம் 10
  8. கிராம்பு 6
  9. மி.தூள் தே.அளவு
  10. உப்பு தே.அளவு
  11. புதினா ஒரு கட்டு
  12. மல்லி ஒரு கட்டு
  13. எண்ணெய் ஒரு கப்
  14. ப.மிளகாய் 4

வழிமுறைகள்

  1. பாஸ்மதி அரிசியை களைந்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  2. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி பாதியளவு பட்டை.கிராம்பு.ஏலம் சேர்த்து தாளிக்கவும்.
  3. அதிலேயே புதினா மல்லி இலையை அரிந்து சேர்க்கவும்.
  4. அதனுடன் வெங்காயம் ப.மிளகாயை நீளவாக்கில் அரிந்து சேர்க்கவும்.
  5. அதில் தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை கிளறவும்
  6. அதிலேயே சிக்கனை சேர்த்து கிளறி தண்ணீர் ஊற்றவும்.
  7. சட்டியை மூடி சிக்கனை வேக விடவும்.
  8. இன்னொரு சட்டியில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் ஊற வைத்த பாஸ்மதியை வடித்து சேர்க்கவும்.
  9. முக்கால் பதமாக வெந்ததும் வடித்து வைக்கவும்.
  10. சிக்கன் நன்றாக வெந்து எண்ணெய் மேலே பிரிந்து வரும்.
  11. அதில் மீதமுள்ள பாதியளவு பட்டை.கிராம்பு ஏலத்தை வறுத்து பொடித்து சிக்கனில் சேர்க்கவும்.
  12. சிக்கனில் தண்ணீர் வற்றி கிரேவியானதும் வடித்த பாஸ்மதி சோற்றின் மீது ஊற்றி பரப்பவும்.
  13. அடுப்பை மிதமான தீயில் பத்து நிமிடம் வைக்கவும்.
  14. பிறகு திறந்து கிளறி விட்டு எடுத்தால் சுவையான பாய்கடை பிரியாணி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்