வீடு / சமையல் குறிப்பு / காயல்பட்டினம் கடற்கரை ஸ்பெஷல் கறி கஞ்சி

Photo of Kayalpattinam Special Chicken Porridge by Ayesha Shifa at BetterButter
14
0
0.0(0)
0

காயல்பட்டினம் கடற்கரை ஸ்பெஷல் கறி கஞ்சி

Mar-11-2019
Ayesha Shifa
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

காயல்பட்டினம் கடற்கரை ஸ்பெஷல் கறி கஞ்சி செய்முறை பற்றி

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கடற்கரை ஓரத்தில் அவர்களுக்கே உரிய சுவையில் கிடைக்கும் மணமணக்கும் கறி கஞ்சி

செய்முறை டாக்ஸ்

 • நான் வெஜ்
 • ஈஸி
 • தமிழ்நாடு
 • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

 1. 200 கிராம் சிக்கன்
 2. முக்கால் கப் அரிசி
 3. கால் கப் வறுத்து எடுத்த பாசிப்பருப்பு
 4. சின்ன வெங்காயம் 10
 5. பூண்டு 10 பல்
 6. மீடியம் சைஸ் தக்காளி ஒன்று
 7. 2 பச்சை மிளகாய் நேராக கீறியது
 8. பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி இலை ஒரு கப்
 9. சீரகம் ஒரு டீஸ்பூன்
 10. வெந்தயம் ஒரு டீஸ்பூன்
 11. பெருஞ்சீரகம் ஒரு டீஸ்பூன்
 12. மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்
 13. மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
 14. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
 15. நெய் 2 டீஸ்பூன்
 16. எண்ணெய் சிறிதளவு
 17. பட்டை-2
 18. கிராம்பு 2
 19. ஏலக்காய்-2
 20. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

 1. ஒரு பிஷர் குக்கரில் சிக்கன், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,சிறிதளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் பிரஷர் குக் செய்யவும். அதை தனியே வைக்கவும்.
 2. அரிசியையும் வறுத்த பாசிப் பருப்பையும் 2 தண்ணீரில் அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும்
 3. மற்றொரு பெரிய பிரஷர் குக்கரில் கழுவிய அரிசி பாசிப்பருப்பு சேர்க்கவும்
 4. அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, மிளகாய், கொத்தமல்லி இலை, சீரகம், வெந்தயம், பெருஞ்சீரகம், 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
 5. இப்போது வேக வைத்த சிக்கனையும் தண்ணீருடன் அப்படியே இதனுடன் சேர்க்கவும்
 6. ஆறு முதல் ஏழு டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்
 7. எல்லாவற்றையும் நன்கு கலந்து குக்கரை மூடி 20 நிமிடம் குறைவான தீயில் வைத்து Pressure Cook செய்யவும்.
 8. பிரஷர் குக்கரை ஆவி அடங்கிய பிறகு திறக்கவும்
 9. எல்லாமே ஒன்று சேர்ந்து நன்கு மசிந்து வெந்திருக்கும். அதை ஒரு மத்து கொண்டு நன்கு கடையவும்.
 10. இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து , தண்ணீர் தேவைப்பட்டால் அதையும் சேர்த்து ஒரு கஞ்சி பதத்திற்கு கொண்டு வரவும்
 11. இப்போது கஞ்சியை குறைவான தீயில் வைத்து 10 முதல் 20 நிமிடங்கள் கைவிடாமல் கிளறி நன்கு கொதிக்க வைக்கவும்.
 12. ஒரு வாணலியில் நெய் ஊற்றி பட்டை , கிராம்பு, ஏலக்காய் , 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி அதை கஞ்சியுடன் சேர்த்து கலக்கவும்.
 13. சூடான சுவையான காயல் கடற்கரை கறி கஞ்சி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்