உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கையேந்தி பவன் சிக்கன் கபாப்

Photo of Kaiyendhibavan chicken kebab by Rabia Hamnah at BetterButter
0
0
0(0)
0

கையேந்தி பவன் சிக்கன் கபாப்

Mar-12-2019
Rabia Hamnah
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கையேந்தி பவன் சிக்கன் கபாப் செய்முறை பற்றி

மாலை நேரங்களில் கையேந்திபவன் ரோட்டு கடையில் விற்கப்படும் சுவையான சிக்கன் கபாப்

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తేలికైనవి
  • రాత్రి విందు
  • తమిళనాడు
  • వేయించేవి
  • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் அரை கிலோ
  2. தயிர் 2 மேஜைக்கரண்டி
  3. சிக்கன் 65 பொடி 2 டேபிள் ஸ்பூன்
  4. மிளகாய் தூள் -4 ஸ்பூன்
  5. சீரகத்தூள் -அரை ஸ்பூன்
  6. மிளகு தூள் -அரை ஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு விழுது -2 டேபிள்ஸ்பூன்
  8. எலுமிச்சை- 1
  9. உப்பு -தேவைக்கு
  10. கார்ன் ஃப்ளார் மாவு 2 டேபிள் ஸ்பூன்
  11. அரிசி மாவு 2 டேபிள்ஸ்பூன்
  12. தேங்காய் எண்ணெய் பொரிக்க
  13. பெரிய வெங்காயம் அலங்கரிக்க
  14. முட்டை ஒன்று
  15. சிவப்பு ஃபுட் கலர்-2சிட்டிகை

வழிமுறைகள்

  1. சிக்கனை நன்றாக கழுவி தண்ணீரை வடிகட்டி உப்பு மிளகாய் தூள் 1/2 எலுமிச்சை சாறு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  2. அரை மணிநேரம் ஊறிய பின்பு தேங்காய் எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மீதமுள்ள எலுமிச்சை சாறையும் சேர்த்து மீண்டும் 30 நிமிடம் ஊற வைக்கவும்
  3. பின்பு எண்ணெயை நன்றாக காய வைக்கவும்
  4. என்னை நன்றாக காய்ந்த பின்பு சிக்கனை சேர்த்து பொரித்து எடுக்கவும்
  5. சுவையான காரசாரமான மாலை நேரங்களில் கையேந்திபவணில் விற்கப்படும் சிக்கன் கபாப் ரெடி
  6. மேலே எலுமிச்சை வெங்காயம் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்