Photo of Onion pakoda by Navas Banu L at BetterButter
585
0
0.0(0)
0

உள்ளி வடை

Mar-12-2019
Navas Banu L
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உள்ளி வடை செய்முறை பற்றி

" உள்ளி வடை " ( Onion pakoda ) தேவையான பொருட்கள் கடலை மாவு - 2 கப் அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூண் பெரிய வெங்காயம் - 3 இஞ்சி - 1துண்டு பச்சை மிளகு - 3 கறிவேப்பிலை - 2 தண்டு மிளகு பொடி - 1 டீஸ்பூண் காயப்பொடி - 1/2 டீஸ்பூண் பொரிப்பதற்க்கு (டீப் ஃப்ரை) தேவையான எண்ணெய் உப்பு - தேவைக்கு செய்முறை : 1. வெங்காயத்தை நீளத்தில் நைஸாக வெட்டிக் கொள்ளவும். 2. இஞ்சியை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். 3. பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். 4.கறிவேப்பிலையை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். 5. வெட்டி வைத்த வெங்காயத்தில் சிறிது உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து 8 நிமிடம் அப்படியே வைக்கவும். 6. 8 நிமிடம் கழித்து பார்க்கும் போது வெங்காயத்தில் தண்ணீர் ஊறி நிற்கும். அந்த தண்ணீரிலேயே நாம் மாவைக் குழைக்கலாம். 7.இந்த வெங்காயத்துடன் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகு, கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸ் பண்ணவும். 8.இதனுடன் கடலை மாவு, அரிசி மாவு,மிளகு பொடி, காயப்பொடி, எல்லாம் சேர்த்து கை கொண்டு நன்றாக குழைத்துக் கொள்ளவும். 9.உப்பு பார்த்துக்கொள்ளவும்.தேவைப்பட்டால் உப்பு சிறிது சேர்த்துக் கொள்ளவும். 10.ஒரு வாணலி அடுப்பில் வைத்து டீப் ஃப்ரை செய்வதற்குள்ள எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். 11. எண்ணெய் சூடானதும், குழைத்து வைத்த வெங்காயக் கலவையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து எண்ணையில் போடவும். 12. மிதமான தீயில் பொரிக்கவும். 13.ஒரு பக்கம் வெந்ததும் மறு பக்கம் மறித்துப்போட்டு டீப் ஃப்ரை செய்து கோல்டன் ப்ரவுன் கலர் ஆனதும் எண்ணெயில் இருந்து கோரி எடுக்கவும். டீ உடன் பரிமாறவும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • இந்திய

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலை மாவு - 2 கப்
  2. அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூண்
  3. பெரிய வெங்காயம் - 3
  4. இஞ்சி - 1 துண்டு
  5. பச்சை மிளகு - 3
  6. கறிவேப்பிலை - 2 தண்டு
  7. மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூண்
  8. மிளகு பொடி - 1 டீஸ்பூண்
  9. காயப்பொடி - 1/2 டீஸ்பூண்
  10. பொரிப்பதற்க்கு தேவையான எண்ணெய்
  11. உப்பு தேவைக்கு

வழிமுறைகள்

  1. வெங்காயத்தை நீளத்தில் நைஸாக வெட்டிக் கொள்ளவும்.
  2. இஞ்சியை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. பச்சை மிளகை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  4. கறிவேப்பிலையை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  5. வெட்டி வைத்த வெங்காயத்தில் சிறிது உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து 8 நிமிடம் அப்படியே வைக்கவும்.
  6. 8 நிமிடம் கழித்து பார்க்கும் போது வெங்காயத்தில் தண்ணீர் ஊறி நிற்கும். அந்த தண்ணீரிலேயே மாவை குழைத்துக் கொள்ளலாம்.
  7. இந்த வெங்காயத்துடன் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகு, கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
  8. இதனுடன் கடலைமாவு, அரிசி மாவு, மஞ்சள் பொடி, மிளகு பொடி, காயப்பொடி எல்லாம் சேர்த்து கை கொண்டு நன்றாக குழைத்துக் கொள்ளவும்.
  9. உப்பு பார்த்துக்கொள்ளவும்.தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  10. ஒரு வாணலி அடுப்பில் வைத்து டீப் ஃப்ரை செய்வதற்கு தேவையான எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
  11. எண்ணெய் சூடானதும் குழைத்து வைத்த வெங்காயக் கலவையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து எண்ணெயில் போடவும்.
  12. மிதமான தீயில் பொரிக்கவும்.
  13. ஒரு பக்கம் வெந்ததும் மறு பக்கம் மறித்து போட்டு டீப் ஃப்ரை செய்து கோல்டன் ப்ரவுன் கலர் ஆனதும் எண்ணெயில் இருந்து கோரி எடுக்கவும். டீ உடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்