வீடு / சமையல் குறிப்பு / கோதுமை மாகி மோமோஸ்

Photo of Wheat maggi momos by Ashwini Lakshmanakumar at BetterButter
608
1
0.0(0)
0

கோதுமை மாகி மோமோஸ்

Mar-13-2019
Ashwini Lakshmanakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கோதுமை மாகி மோமோஸ் செய்முறை பற்றி

டெல்லி வீதிகளில் பிரபலமான மாகி நூடுல்ஸ் மோமோஸ் கோதுமை மாவில்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • சைனீஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு 1 கப்
  2. எண்ணெய் 2 மேஜை கரண்டி
  3. உப்பு தேவைக்கேற்ப
  4. பூண்டு 1 மேஜை கரண்டி
  5. வெங்காயம் 2 மேஜை கரண்டி
  6. முட்டை கோஸ் துருவியது 1 மேஜை கரண்டி
  7. கேரட் துருவியது 1 மேஜை கரண்டி
  8. குடை மிளகாய் 1 மேஜை கரண்டி
  9. மாகி நூடுல்ஸ் 1 துண்டு
  10. தண்ணீர் 1 கப்
  11. சோயா சாஸ் 1/2 மேஜை கரண்டி
  12. சில்லி சாஸ் 1 மேஜை karandi

வழிமுறைகள்

  1. கோதுமை மாவை uppu, எண்ணெய் 1 மேஜை கரண்டி மற்றும் தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து, ஒரு துணியால் மூடி, ஒரு மணி நேரம் ஊற விடவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பூண்டு சேர்த்து வதக்கவும்.
  3. பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. பிறகு முட்டை கோஸ், கேரட், குடை மிளகாய் அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. இதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, மாகி மசாலா சேர்க்கவும்.
  6. தண்ணீர் கொதித்தவுடன் அதில் மாகி நூடுல்ஸ் சிறு துண்டுகளாக நொறுக்கி போடவும்.
  7. மாகி வெந்தவுடன் அத்துடன் சோயா சாஸ் மற்றும் சில்லி சாஸ் சேர்த்து கலந்து இறக்கவும்.
  8. மோமோஸில் வைக்கும் மசாலா தயார்.
  9. ஊறிய கோதுமை மாவை சிறிய மற்றும் மெலிய வட்டங்களாக திரட்டி கொள்ளவும்.
  10. அதனுள் மாகி மசாலா கலவையை வைக்கவும்.
  11. கொழுக்கட்டை செய்வது போன்று ஓரங்களை ஒட்டி கொள்ளவும்.
  12. பிறகு இரண்டு நுனிகளையும் சேர்த்து ஒட்டி கொள்ளவும்.
  13. இதே போன்று அணைத்து மோமோஸ்களும் செய்து ஆவியில் 10 நிமிடங்கள் வேக விடவும்.
  14. இப்பொழுது சுவையான மாகி மசாலா கோதுமை மோமோஸ் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்