வீடு / சமையல் குறிப்பு / கையேந்தி பவன் நைட் டிபன்

Photo of Kaiyendhi bhavan night Tiffen by Nazeema Banu at BetterButter
919
1
0.0(0)
0

கையேந்தி பவன் நைட் டிபன்

Mar-13-2019
Nazeema Banu
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கையேந்தி பவன் நைட் டிபன் செய்முறை பற்றி

நான்கு சைட் டிஷ்ஷுடன் கையேந்தி பவன் டிபன் நாவூற செய்யக்கூடியது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • ஸ்டீமிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி.தேவையானவை
  2. இட்லி அரிசி இரண்டு கப்
  3. உளுந்து அரை கப்
  4. வெந்தயம் ஒரு ஸ்பூன்
  5. ஆனியன் ஊத்தப்பம்
  6. தேவையானவை
  7. இட்லி மாவு இரண்டு கப்
  8. பெ.வெங்காயம் 2
  9. கொ.மல்லி இலை சிறிது
  10. எண்ணெய் தே.அளவு
  11. மல்லி கடலை சட்னி
  12. தேவையானவை
  13. உடைச்ச கடலை அரை கப்
  14. தேங்காய் துருவல் அரை கப்
  15. ப.மிளகாய் மூன்று
  16. இஞ்சி சிறு துண்டு
  17. மல்லி இலை இரண்டு கொத்து
  18. உப்பு தே.அளவு
  19. ப.மிளகாய் தக்காளி சட்னி
  20. தேவையானவை
  21. தக்காளி இரண்டு
  22. ப.மிளகாய் 4
  23. பெ.வெங்காயம் 1
  24. உப்பு தே.அளவு
  25. எண்ணெய் சிறிது
  26. டிபன் சாம்பார்
  27. தேவையானவை
  28. பாசிபருப்பு ஒரு கப்
  29. தக்காளி 3
  30. சின்ன அ பெ.வெங்காயம்3
  31. கறிவேப்பிலை மல்லி சிறிது
  32. கா.மிளகாய் 4
  33. ம.தூள் ஒரு ஸ்பூன்
  34. சாம்பார் பொடி 2ஸ்பூன்
  35. உப்பு தே.அளவு
  36. சோம்பு அரை ஸ்பூன்
  37. கட்டி பெருங்காயம் சிறு துண்டு
  38. இட்லி மிளகாய் பொடி
  39. தேவையானவை
  40. உளுந்து அரை கப்
  41. கா.மிளகாய் 10
  42. மிளகு அரை ஸ்பூன்
  43. சீரகம் அரை ஸ்பூன்
  44. பெருங்காயம் ஒரு ஸ்பூன்
  45. செக்கு ந.எண்ணெய் கால் கப்
  46. தாளிக்க தேவையானவை
  47. கடுகு உளுந்து 2ஸ்பூன்
  48. கா.மிளகாய் 4
  49. கறிவேப்பிலை சிறிது
  50. ந.எண்ணெய் இரண்டு டே.ஸ்பூன்

வழிமுறைகள்

  1. இட்லி செய்முறை.
  2. அரிசி மற்றும் உளுந்தை தனித்தனியே ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. இரண்டையும் தனித்தனியே அரைத்து ஆறு மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  4. புளித்த மாவில் தேவையான உப்பு சேர்த்து இட்லிகளாக ஊற்றவும்.
  5. மல்லி கடலை சட்னி
  6. செய்முறை
  7. தே.துருவல்.உ.கடலை ப.மிளகாய்.மல்லி.இஞ்சி உப்பு சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும்.
  8. அரைத்த சட்னியை கிண்ணத்தில் வைக்கவும்.
  9. டிபன் சாம்பார் செய்முறை
  10. குக்கரில் பருப்பைக் கழுவி சேர்த்து அதனுடன் வெங்காயம்.கா.மிளகாய்.சோம்பு.தக்காளி.கறிவேப்பிலை மல்லி சேர்த்து வேக வைக்கவும்.
  11. குக்கரை திறந்து சாம்பார் பொடி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  12. மீண்டும் மல்லி கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
  13. ப.மிளகாய் சட்னி
  14. ஒரு கடாயில் சிறிது ந.எண்ணெய் ஊற்றி வெங்காயம்.தக்காளியை துண்டுகளாக்கி போடவும்.
  15. அதிலேயே ப.மிளகாய் உப்பு சேர்த்து லதக்கவும்
  16. ஆற விட்டு மிக்சியில் அரைக்கவும்.
  17. இட்லி மிளகாய் பொடி
  18. செய்முறை
  19. ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் உளுந்து சேர்த்து வறுக்கவும்
  20. அதனுடன் கா.மிளகாய்.மிளகு.சீரகம்.பெருங்காயம்.உப்பு சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.
  21. ஆறியதும் மிக்சியில் கரகரப்பாக அரைத்து செக்கு ந.எண்ணெய் கலந்து வைக்கவும்.
  22. ஊத்தப்பம்.
  23. செய்முறை
  24. தோசைக்கல்லில் எண்ணெய் தடவி தோசை மாவை பரப்பவும்.
  25. அதன் மேல் பொடியாக நறுக்கிய பெ.வெங்காயம்.மல்லி இலையை தூவவும்.
  26. ஒரு புறம் வெந்ததும் மறு புறம் சிவக்க விட்டு எடுக்கவும்.
  27. கையேந்தி பவன் டிபன் காம்போ ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்