வீடு / சமையல் குறிப்பு / முட்டை அத்தோ ஃப்ரை (பர்மா தெருக்கடை உணவு)

Photo of Egg Aththo Fry(Burma Street Food) by Jayasakthi Ekambaram at BetterButter
2094
0
0.0(0)
0

முட்டை அத்தோ ஃப்ரை (பர்மா தெருக்கடை உணவு)

Mar-13-2019
Jayasakthi Ekambaram
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முட்டை அத்தோ ஃப்ரை (பர்மா தெருக்கடை உணவு) செய்முறை பற்றி

நூடுல்ஸ் வைத்து செய்யும் பர்மாவின் பிரசித்தி பெற்ற தெருக்கடை உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • ஃப்யூஷன்
  • பான் பிரை
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நூடுல்ஸ் 200 கிராம்
  2. பெரிய வெங்காயம் 2
  3. முட்டைக்கோஸ் 150 கிராம்
  4. பூண்டு 8 பற்கள்
  5. ரீஃபைண்ட் ஆயில் 6 டீஸ்பூன்
  6. சில்லி ஃப்ளேக்ஸ் 2 டீஸ்பூன்
  7. உப்புத்தூள் தேவையான அளவு
  8. முட்டை இரண்டு
  9. கரம் மசாலா தூள் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெங்காயம் முட்டைகோஸ் இவற்றை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்
  2. தேவையான அளவு தண்ணீர் கொதிக்க வைத்து அதில் நூடுல்ஸை போட்டு நன்றாக வேக வைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும்
  3. வடித்த நூடுல்சில் ஒரு ஸ்பூன் எண்ணெய் கலந்து வைக்கவும்
  4. ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி முதலில் வெங்காயத்தை சிவப்பு நிறமாக வறுத்து எடுக்கவும்
  5. அதே எண்ணெயில் பூண்டு பற்களை சிவப்பு நிறமாக வறுத்து எடுக்கவும்
  6. அடுப்பில் ஒரு பெரிய கடாயை வைத்து நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்
  7. அதில் முதலில் வெங்காயத்தை சிறிது நேரம் வதக்கி பிறகு முட்டைக்கோஸை போட்டு சிறிது நேரம் வதக்கவும்
  8. சில்லி ஃப்ளேக்ஸ் கரம் மசாலா தூள் உப்பு தூள் சேர்த்து வதக்கவும்
  9. இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக வறுக்கவும்
  10. வெங்காயம் பூண்டு வறுத்த எண்ணெய் அதில் சேர்த்துக் கொள்ளவும்
  11. முட்டை நன்றாக வறுத்த பிறகு நூடுல்ஸை அதில் சேர்த்து நன்றாக மேலும் கீழுமாக கலக்கவும்
  12. நன்றாக கலந்து சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்