வீடு / சமையல் குறிப்பு / முட்டை பணியாரம்

Photo of Egg paniyaram by Navas Banu L at BetterButter
341
0
0.0(0)
0

முட்டை பணியாரம்

Mar-14-2019
Navas Banu L
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முட்டை பணியாரம் செய்முறை பற்றி

" முட்டை பணியாரம் " தேவையான பொருட்கள் முட்டை - 4 வெங்காயம் சிறிதாக நறுக்கியது - 1 தக்காளி சிறிதாக நறுக்கியது - 1 கேரட் சிறிதாக நறுக்கியது - 1 முட்டைக் கோஸ் சிறிதாக நறுக்கியது - கொஞ்சம் பச்சை மிளகு சிறிதாக நறுக்கியது - 1 மல்லி இலை நறுக்கியது - கொஞ்சம் மிளகு தூள் - 1/2 டீஸ்பூண் பொரிப்பதற்க்கு தேவையான எண்ணெய் உப்பு - தேவைக்கு பெப்பர் பொடி - 1/2 டீஸ்பூண் செய்முறை : *முட்டையை ஒரு பவுளில் உடைத்து ஊற்றி அதனுடன் தேவைக்கு உப்பும் பெப்பர் பொடியும் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும் * இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, முட்டைக் கோஸ்,கேரட், பச்சை மிளகு, மல்லி இலை மிளகு தூள் எல்லாம் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி வைக்கவும். *குழி பணியாரச் சட்டி அடுப்பில் வைத்து சூடானதும் அதில் எல்லா குழிகளிலும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கொடுக்கவும். * முட்டை மிக்ஸை ஒவ்வொரு குழியிலும் கொஞ்சம் கொஞ்சம் ஊற்றிக் கொடுக்கவும். * மிதமான தீயில் சுட வேண்டும். * ஒரு பக்கம் வெந்ததும் மறித்து போடவும். * மறு பக்கமும் வெந்து கோல்டன் ப்ரவுன் கலர் ஆகும் போது எடுக்கவும். * கேரட் துருவியது,வெங்காயம் நறுக்கியது, மல்லி இலை நறுக்கியது தூவி பரிமாறவும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • இந்திய

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முட்டை - 4
  2. வெங்காயம் சிறிதாக நறுக்கியது - 1
  3. தக்காளி சிறிதாக நறுக்கியது - 1
  4. முட்டைக்கோஸ் சிறிதாக நறுக்கியது - கொஞ்சம்
  5. கேரட் சிறிதாக நறுக்கியது - 1
  6. பச்சை மிளகு சிறிதாக நறுக்கியது - 1
  7. பொடியாக நறுக்கிய மல்லித்தழை - கொஞ்சம்
  8. மிளகு தூள் - 1/2 டீஸ்பூண்
  9. உப்பு தேவைக்கு
  10. பொரிப்பதற்க்கு தேவையான எண்ணெய்

வழிமுறைகள்

  1. முட்டையை ஒரு பவுளில் உடைத்து ஊற்றி தேவைக்கு உப்பும், 1/2 டீஸ்பூண் பெப்பர் பொடியும் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
  2. இதில் சிறிதாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட், முட்டைக்கோஸ், பச்சைமிளகாய், மல்லித்தழை, மிளகு தூள் எல்லாம் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி வைக்கவும்.
  3. குழி பணியாரச் சட்டி அடுப்பில் வைத்து சூடானதும் அதில் எல்லா குழிகளிலும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றிக் கொடுக்கவும்.
  4. முட்டை மிக்ஸை எல்லா குழியிலும் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கொடுக்கவும்.
  5. மிதமான தீயில் சுட வேண்டும்.
  6. ஒரு பக்கம் வெந்ததும் மறித்துப் போடவும்.
  7. மறு பக்கமும் வெந்து கோல்டன் ப்ரவுன் கலர் ஆகும் போது எண்ணெயில் இருந்து எடுக்கவும்.
  8. கேரட் துருவியது,வெங்காயம் நறுக்கியது,மல்லி இலை நறுக்கியது தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்