வீடு / சமையல் குறிப்பு / ஆலூ சன்னா சாட்

Photo of Aloo channa chaat by Navas Banu L at BetterButter
60
0
0.0(0)
0

ஆலூ சன்னா சாட்

Mar-16-2019
Navas Banu L
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஆலூ சன்னா சாட் செய்முறை பற்றி

" ஆலு சன்னா சாட் " தேவையான பொருட்கள் வெள்ளைக் கொண்டைக்கடலை வேக வைத்தது - அரை கப் வேக வைத்து வெட்டித் துண்டுகளாக்கிய உருளைக் கிழங்கு - 2 வெங்காயம் நறுக்கியது- 1 பச்சை மிளகாய் நறுக்கியது - 2 மல்லித்தழை நறுக்கியது - 2 டேபிள் ஸ்பூண் புதினா இலை நறுக்கியது - 2 டேபிள் ஸ்பூண் சாட் மஸாலா - 1 டீஸ்பூண் மிளகாய் தூள் - 1 டீஸ்பூண் லெமன் ஜூஸ் - 1 டீஸ்பூண் இனிப்பு புளி சட்னி - 2 டேபிள் ஸ்பூண் உப்பு தேவைக்கு மாதுளை விதைகள் - 3 டேபிள் ஸ்பூண் ஜீரக தூள் - 1 டீஸ்பூண் உருக்கிய பட்டர் - 1 டீஸ்பூண் செய்முறை : * வேக வைத்த உருளைக் கிழங்கு துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போடவும். *அதனுடன் வேக வைத்த கொண்டைக்கடலையையும் சேர்க்கவும். * இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை, புதினா இலை சேர்க்கவும். *இதனுடன் மிளகு பொடி, சாட் மஸாலா பொடி,லெமன் ஜூஸ், உப்புப் பொடி, புளி சட்னி சேர்க்கவும். * எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் பண்ணவும். * இதனுடன் மாதுளை விதைகள், ஒரு டீஸ்பூண் உருக்கிய பட்டர், ஜீரகத் தூள் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் பண்ணி பரிமாறவும்.

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • நார்த் இந்தியன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. வேக வைத்த வெள்ளைக் கொண்டைக்கடலை - 1/2 கப்
 2. வேக வைத்து துண்டுகளாக வெட்டிய உருளைக் கிழங்கு - 2
 3. வெங்காயம் நறுக்கியது - 1
 4. பச்சை மிளகாய் நறுக்கியது - 2
 5. மல்லித்தழை நறுக்கியது -2 டேபிள் ஸ்பூண்
 6. புதினா இலை நறுக்கியது - 2 டேபிள் ஸ்பூண்
 7. சாட் மஸாலா - 1 டீஸ்பூண்
 8. மிளகாய் தூள் - 1 டீஸ்பூண்
 9. லெமன் ஜூஸ் - 1 டீஸ்பூண்
 10. இனிப்பு புளி சட்னி - 2 டேபிள் ஸ்பூண்
 11. உப்பு - தேவைக்கு
 12. மாதுளை விதைகள் - 3 டேபிள் ஸ்பூண்
 13. ஜீரக தூள் - 1 டீஸ்பூண்
 14. உருக்கிய பட்டர் - 1 டீஸ்பூண்

வழிமுறைகள்

 1. ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக் கிழங்கு துண்டுகளைப் போடவும்.
 2. அதனுடன் வேக வைத்த கொண்டைக் கடலையையும் சேர்க்கவும்.
 3. இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை, புதினா இலை சேர்க்கவும்.
 4. இதனுடன் மிளகு பொடி, சாட் மஸாலா பொடி, லெமன் ஜூஸ், உப்பு தூள், புளி சட்னி சேர்க்கவும்.
 5. எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் பண்ணவும்.
 6. இதனுடன் மாதுளை விதைகள், ஜீரகத் தூள், ஒரு டீஸ்பூண் உருக்கிய பட்டர் இவை அனைத்தையும் சேர்த்து திரும்பவும் எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் பண்ணி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்