Photo of Dahi Poori by Deepa Srivatsan at BetterButter
209
0
0.0(0)
0

தஹி பூரி

Mar-16-2019
Deepa Srivatsan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தஹி பூரி செய்முறை பற்றி

தஹி பூரி தெரு ஓரங்களில் விற்கப்படும் ஒரு சாட் வகை மிகவும் சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பானிபூரி ஒரு பாக்கெட்
  2. கெட்டித்தயிர் 300 மில்லி
  3. புதினா ஒரு கட்டு
  4. பச்சை மிளகாய் 2
  5. உருளைக்கிழங்கு பெரியது 4
  6. சாட் மசாலா 3/4 ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. சர்க்கரை ஒரு டீஸ்பூன்
  9. ஓமப் பொடி 100 கிராம்
  10. வெங்காயம் 2 பெரியது பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்
  11. காரப் பொடி அரைஸ்பூன்

வழிமுறைகள்

  1. புதினாவை நன்றாக ஆய்ந்து பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து செமி சாலிட்டாக சட்னி அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
  2. உருளைக்கிழங்கை வேக வைத்து சாட் மசாலா உப்பு, காரப்பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக மசித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
  3. தயிரை நன்கு கட்டியில்லாமல் கலந்து சர்க்கரை மற்றும் சிறிது உப்பு சேர்க்கவும்.
  4. பானி பூரியை ஒவ்வொன்றாக உடைத்து முதலில் மசித்து வைத்த உருளைக்கிழங்கு புதினா சட்னி தயிர் மற்றும் ஓமப்பொடி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
  5. பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் அதன்மீது தூவவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்