வீடு / சமையல் குறிப்பு / பர்மா அத்தோ

Photo of Burma Atho by Aishwarya Rangan at BetterButter
734
3
0.0(0)
0

பர்மா அத்தோ

Mar-16-2019
Aishwarya Rangan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பர்மா அத்தோ செய்முறை பற்றி

சென்னையில் ஃபேமஸான தெரு கடை உணவான பர்மா அதோ இப்போது வீட்டிலேயே எளிய முறையில் செய்திடலாம்

செய்முறை டாக்ஸ்

  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. நூடுல்ஸ் 1 கப்
  2. கேரட் 1
  3. பெரிய வெங்காயம் 2
  4. பூண்டு 10 பல்
  5. முட்டைக்கோஸ் 1 கப்
  6. சமையல் எண்ணெய் 1/4 கப்
  7. சிவப்பு மிளகாய் தூள் 1/4 ஸ்பூன்
  8. பொட்டுக்கடலை 3ஸ்பூன்
  9. வேர்க்கடலை 3 ஸ்பூன்
  10. புளி சிறிதளவு
  11. தட்டை 4
  12. கொத்தமல்லி சிறிதளவு
  13. சிவப்பு மிளகாய் 4
  14. உப்பு தேவையான அளவு
  15. எலுமிச்சை பழம் 1

வழிமுறைகள்

  1. ஒரு பக்கெட் நூடுல்ஸ் எடுத்துக்கொள்ளவும் சிறிதளவு தண்ணீரில் ஆரஞ்சு ஃபுட் கலர் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்
  2. சில்லி ஃப்ளேக்ஸ் செய்வதற்காக 4 சிவப்பு மிளகாயை வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. வேர்க்கடலை 3 ஸ்பூன் எடுத்து வறுத்து அரைத்து கொள்ளவும்
  4. பொட்டுக்கடலை 3ஸ்பூன் அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  5. ஒரு வெங்காயம் நீளமாக நறுக்கி fried onions செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
  6. பூண்டு பத்து பல் எடுத்துக்கொள்ளவும் அதே எண்ணெயில் பொன்னிறமாக ப்ரை செய்து கொள்ளவும்
  7. மீதமான எண்ணையை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும் அதில் சிறிதளவு சிவப்பு மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளவும்
  8. சிறிதளவு புளி 10 நிமிடம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும் ஒரு கப்பில் உப்பு சேர்த்து தண்ணீர் ஒரு கப் எடுத்துக் கொள்ளவும்
  9. இப்போது அனைத்து பொருட்களும் ரெடியாகிவிட்டது வேக வைத்த நூடுல்ஸ் உடன் கேரட் கோஸ் வெங்காயம் கொத்தமல்லி சேர்த்துக் கொள்ளவும்
  10. அத்துடன் அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை பவுடர் வேர்க்கடலை பவுடர் புளித்தண்ணீர் உப்பு தண்ணீர் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து கிளறி விடவும்
  11. கிரேக்கர்ஸ் எனப்படும் தட்டை உடைத்து அதை சேர்க்கவும்
  12. இப்போது மிகவும் சுவையான பர்மா அத்தோ சென்னையில் மிகவும் ஃபேமஸான தெருக்கடை உணவு வீட்டிலேயே தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்