வீடு / சமையல் குறிப்பு / மும்பை தெரு கடை உணவு ( வெஜிடபிள், சீஸ் தோசை)

Photo of Mumbai street food (vegetables cheese dosa) by Jayasakthi Ekambaram at BetterButter
526
0
0.0(0)
0

மும்பை தெரு கடை உணவு ( வெஜிடபிள், சீஸ் தோசை)

Mar-17-2019
Jayasakthi Ekambaram
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மும்பை தெரு கடை உணவு ( வெஜிடபிள், சீஸ் தோசை) செய்முறை பற்றி

தோசையின் மேல் காய்கறிகள், துருவிய சீஸ் தூவி செய்யும் தோசை. இது மும்பையில் பிரசித்தி பெற்ற தெரு கடை உணவு ஆகும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • மகாராஷ்டிரம்
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை மாவு ஒரு கரண்டி
  2. வெங்காயம் ஒன்று
  3. தக்காளி ஒன்று
  4. குடை மிளகாய் பாதி
  5. முட்டைகோஸ் 100 கிராம்
  6. கேரட் ஒன்று
  7. சீஸ் இரண்டு கியூப்கள்
  8. நல்லெண்ணெய் தேவையான அளவு
  9. சில்லி சாஸ் 2 டீஸ்பூன்
  10. தக்காளி சாஸ் 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளி கேரட் குடைமிளகாய் முட்டைகோஸ் ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. சீஸை துருவி வைத்துக் கொள்ளவும்
  3. அடுப்பில் தோசைக்கல்லை வைத்து மூன்று கரண்டி தோசை மாவை ஊற்றவும்
  4. தோசையின் மேல் எல்லா காய்களையும் சிறிது தூவிக் கொள்ளவும்
  5. சில்லி சாஸ் டொமேட்டோ சாஸ் கொஞ்சம் ஊற்றிக் கொள்ளவும்
  6. துருவிய சீஸை மேலே தூவிக் கொள்ளவும்
  7. ஒரு ஸ்பூனால் எல்லாவற்றையும் மேலே நன்றாகத் தேய்த்து பரப்பவும்
  8. தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி தோசையை 5 நிமிடங்கள் மூடி வேக வைக்கவும்
  9. தோசை நன்றாக வெந்து சீஸ் உருகும் வரை மூடி வைக்கவும்
  10. நன்றாக வெந்த பிறகு தட்டில் வைத்து சட்னி அல்லது குருமாவுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்