வீடு / சமையல் குறிப்பு / கேரளா தட்டு கடை ஸ்டைல் கப்பா புழுக்கு மீன் கறி

Photo of Kerala Thattukada style Kappa with fish curry by Pavithra Prasad at BetterButter
878
0
0.0(0)
0

கேரளா தட்டு கடை ஸ்டைல் கப்பா புழுக்கு மீன் கறி

Mar-17-2019
Pavithra Prasad
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரளா தட்டு கடை ஸ்டைல் கப்பா புழுக்கு மீன் கறி செய்முறை பற்றி

மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும் இந்த ஸ்பெஷல் உணவுகள்

செய்முறை டாக்ஸ்

  • கேரளா

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கப்பா புழுக்கு உண்டாக்க தேவையான பொருட்கள்
  2. மரவள்ளிக்கிழங்கு - 1 கிலோ
  3. பச்சை மிளகாய் 3
  4. இஞ்சி - 1 சிறிய பீஸ்
  5. தேங்காய் துருவியது - 4 டேபிள்ஸ்பூன்
  6. சின்ன வெங்காயம் 5-6
  7. உப்பு தேவையான அளவு
  8. தேங்காய் எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்
  9. கேரளா மீன் கறி உண்டாக்க தேவையானவை
  10. கானாங்கெளுத்தி 1/2 கிலோ மீன் சிறிய பீஸ்
  11. தேங்காய் துருவல் -6 டேபிள்ஸ்பூன்
  12. இஞ்சி சிறியது 1
  13. வெள்ளை பூண்டு 2 அல்லி
  14. மிளகாய் பொடி ஒரு டேபிள்ஸ்பூன்
  15. மஞ்சள் பொடி ஒரு டீஸ்பூன்
  16. மல்லிப் பொடி ஒன்றரை டேபிள்ஸ்பூன்
  17. தேவையான அளவு உப்பு
  18. பச்சைமிளகாய் - 2
  19. குடம் புளி - 1
  20. தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  21. கடுகு தேவையான அளவு
  22. கறிவேப்பிலை தேவையான அளவு
  23. சின்ன வெங்காயம் சிறிதாக அறிந்தது 2 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மரவள்ளிக் கிழங்கை நன்றாக தோல் நீக்கி கொள்ளவும்
  2. மீடியம் சைஸ் முறித்து எடுக்கவும்
  3. பின்னர் மஞ்சள் பொடி உப்பு சேர்த்து தண்ணீரில் வேக வைக்கவும்
  4. மரவள்ளி கிழங்கு வெந்ததும் தண்ணீரை இருந்து மாற்றி எடுத்து வைக்கவும்
  5. மிக்ஸியில் தேங்காய் இஞ்சி பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் உப்பு சேர்த்து நன்றாக தண்ணீர் இல்லாமல் அடித்து எடுக்கவும்
  6. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, மிக்ஸியில் தேங்காய் கலவை கடாயில் சேர்த்து நன்றாக வதக்கவும்
  7. அதில் வேகவைத்த மரவள்ளிகிழங்கு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்
  8. கப்பா புழுக்கு ரெடி
  9. மீன் கறி உண்டாக்க
  10. மிக்ஸியில் தேங்காய் துருவல், பச்சைமிளகாய், மிளகாய் பொடி, மல்லி பொடி, மஞ்சள் பொடி இஞ்சி,பூண்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து எடுக்கவும்
  11. சட்டியில் மீன் எடுக்கவும் அதில் அரைத்த தேங்காய் கலவை சேர்த்து, தேவையான அளவு உப்பு , குடம் புளி ,சேர்த்து மீடியம் தீயில் வைக்கவும்
  12. 20 நிமிடம் மீன் கறி வேக விடவும்
  13. இனி வேற கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சின்ன வெங்காயம் , கறிவேப்பிலை சேர்த்து தாளித்து மீன் கறியில் சேர்க்கவும்
  14. இனி பரிமாறும் போது கப்பா புழுக்கு மீன் கறி சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்