வீடு / சமையல் குறிப்பு / லுகைமாட்/அரபிக் இனிப்பு உருண்டை

Photo of Luqaimat/Arabic sweet dumplings by Priya Suresh at BetterButter
682
0
0.0(0)
0

லுகைமாட்/அரபிக் இனிப்பு உருண்டை

Mar-18-2019
Priya Suresh
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

லுகைமாட்/அரபிக் இனிப்பு உருண்டை செய்முறை பற்றி

அரபிக் மட்டும் எமிரேட் நாடுகளில் எளிதாக கிடைக்கக்கூடிய தெருக்கடை இனிப்பு பலகாரம்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • மிடில் ஈஸ்டர்ன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. 1 கப் மைதா மாவு
  2. 1/2கப் பால் பவுடர்
  3. 1/4கப் சர்க்கரை
  4. 1/2டீ ஸ்பூன் இன்ஸ்டன்ட் ஈஸ்ட்
  5. ஒரு டீஸ்பூன் எண்ணெய்
  6. 1/2 டீஸ்பூன் ஏலக்காய் பவுடர்
  7. 1+1/2 கப் வெதுவெதுப்பான தண்ணீர்
  8. சிறிதளவு குங்குமப்பூ
  9. எண்ணெய் பொரிக்க
  10. வெள்ளை எள்
  11. பேரிச்சம் பழம் சிரப்பு

வழிமுறைகள்

  1. ஒரு பெரிய பாத்திரத்தில் மாவு, பால் பவுடர் ,சர்க்கரை ,ஈஸ்ட் எடுத்துக் கொள்ளவும்
  2. மாவுக் கலவையுடன் ஏலக்காய் பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும்
  3. வெதுவெதுப்பான சூட்டில் உள்ள தண்ணீருடன் குங்குமப்பூவை சேர்த்து கலக்கவும்
  4. பாத்திரத்தில் உள்ள மாவு கலவையுடன், குங்குமப்பூ சேர்த்த மிதமான சூட்டில் உள்ள தண்ணீரை சேர்த்து கெட்டியான மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்
  5. கெட்டியான மாவு கலவையை இரண்டு மணி நேரம் ஊறவிடவும்
  6. 2 மணி நேரத்திற்கு பிறகு மாவு நன்றாக புளித்து பொங்கி இருக்கும்
  7. பொங்கி உள்ள மாவை ஈரமான கைகளை கொண்டு நன்றாக அடித்துக் கொள்ளவும்
  8. பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை சூடாக்கவும்
  9. கைகளின் ஈரமாக்கி தேவைக்கேற்ப உருண்டைகளாக மாவு கலவையில் இருந்து எடுத்து சூடாக உள்ள எண்ணெயில் போடவும்
  10. மிதமான தீயில் வைத்து நன்றாக பிரவுன் நிறம் வரும் வரை உருண்டைகளை பொரித்து எடுக்கவும்
  11. பொரித்தெடுத்து உருண்டைகளை சூடாக பேரிச்சம்பழம் சிரப்புடன் வெள்ளை எள்ளை தூவி பரிமாறவும்
  12. சுவையான அரபிக் மட்டும் எமிரேட் நாடுகளில் கிடைக்கக்கூடிய தெருக்கடை இனிப்பு உருண்டைகள் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்