வீடு / சமையல் குறிப்பு / திபத்திய ஃபேமஸ் ஃப்ளவர் டம்பிளிங்ஸ்

Photo of Tibet Famous Flower Dumplings by Aishwarya Rangan at BetterButter
493
3
0.0(0)
0

திபத்திய ஃபேமஸ் ஃப்ளவர் டம்பிளிங்ஸ்

Mar-18-2019
Aishwarya Rangan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

திபத்திய ஃபேமஸ் ஃப்ளவர் டம்பிளிங்ஸ் செய்முறை பற்றி

திபத்திய ஃபேமஸ் தெரு கடை உணவான ஃப்ளவர் டம்பிளிங்ஸ் இப்போது இன்னும் எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம், காய்கறிகள் வைத்தும் செய்யலாம் அல்லது பன்னீர் சிக்கன் வைத்தும் இந்த ஃபேமஸான தெருக்கடை உணவு செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக்கிழங்கு 3
  2. கேரட் 1
  3. பீன்ஸ் 3
  4. முட்டைக்கோஸ் 1/4 கப்
  5. தேவையான அளவு உப்பு
  6. மைதா 1 ஸ்பூன்
  7. பாஸ்மதி அரிசி 1/4 கப்
  8. கொத்தமல்லி சிறிதளவு
  9. பச்சை மிளகாய் 1
  10. பெரிய வெங்காயம் ஒன்று
  11. பூண்டு 4 பல்
  12. இஞ்சி சிறிதாக

வழிமுறைகள்

  1. பாஸ்மதி அரிசி 1/4 கப் , தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  2. கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், முட்டை கோஸ், கொத்தமல்லி, வெங்காயம் மற்றும் வேக வைத்த உருளைக்கிழங்கு எடுத்துக் கொள்ளவும்
  3. பில்லிங் செய்வதற்காக ஒரு பேனில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அனைத்து காய்கறிகளும் சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. தேவையான அளவு உப்பு 1/4 ஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளலாம்
  5. ஊர் வைத்திருந்த பாஸ்மதி அரிசியின் தண்ணியை நீக்கிவிடவும்
  6. செய்து வைத்திருந்த காய்கறிகளின் உருண்டையாக பிடித்துக் கொள்ளவும்
  7. பின்பு பாஸ்மதி அரிசியில் பிரட்டி எடுத்துக் கொள்ளவும்
  8. சிவப்பு நிறம் பிளவர் டெம்பிளிங் செய்வதற்காக சிறிதளவு சிவப்பு மிளகாய் தூள் அரிசியில் சேர்த்துக் கொள்ளலாம்
  9. பில்லிங் உருண்டையாக பிடித்தவுடன் அரிசியில் திரட்டி எடுத்துக் கொள்ளலாம்
  10. இப்போது இரண்டு வண்ண பிளவர் தயாராகி விட்டது இப்போது ஒரு ஸ்டீமர் அல்லது இட்லிப் பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும்
  11. இட்லி பாத்திரத்தில் 20 முதல் 25 நிமிடம் வரை வேக வைக்க வேண்டும்
  12. 20 நிமிடம் கழித்ததும் வெஜிடபிள் ஃப்ளவர் டெம்பிளிங் தயாராகிவிட்டது
  13. இப்போது திபெத் மற்றும் நேபாளில் அதிகமாக விரும்பிய தெருக்கடை உணவான வெஜிடபிள் பிளவர் dumpling தயாராகிவிட்டது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்