BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பீசாங் கோரங்/இந்தோனேசியன் பொரித்த வாழைப்பழம்

Photo of Pisang Goreng/Indonesian Fried Bananas by Priya Suresh at BetterButter
59
0
0(0)
0

பீசாங் கோரங்/இந்தோனேசியன் பொரித்த வாழைப்பழம்

Mar-18-2019
Priya Suresh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீசாங் கோரங்/இந்தோனேசியன் பொரித்த வாழைப்பழம் செய்முறை பற்றி

இந்தோனேசியாவில் மிகவும் பிரபலமான தெரு கடையில் கிடைக்கக் கூடிய மாலை நேர சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • పాన్ ఆసియన్
  • వేయించేవి
  • చిరు తిండి
  • వేగన్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 4வாழைப்பழம்
  2. 1 கப் அரிசி மாவு
  3. 1 டேபிள்ஸ்பூன் மரவள்ளிக்கிழங்கு மாவு
  4. உப்பு தேவைக்கு
  5. தண்ணீர் தேவைக்கு
  6. பொரிக்க எண்ணெய்

வழிமுறைகள்

  1. வாழைப் பழத்தை நீளவாக்கில் இரண்டாக வெட்டவும்
  2. இரண்டாக வெட்டிய ஒரு வாழைப் பழத் துண்டை எடுத்து கத்தியால் மூன்று தடவை நீளவாக்கில் வெட்டவும்
  3. நீளவாக்கில் வெட்டும் போது கவனமாக இறுதிவரை வெட்டாமல் பிரித்தால் விசிறி போல இருக்குமாறு வாழைப்பழத்தை வெட்டிக் கொள்ளவும்
  4. அரிசி மாவுடன் மரவள்ளிக்கிழங்கு மாவு, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்
  5. தேவையான தண்ணீரை ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்
  6. பொரிக்க தேவையான எண்ணெயை ஒரு வாணலியில் மிதமான தீயில் வைத்து சூடாக்கவும்
  7. எனவே வெட்டிவைத்த வாழைப் பழத் துண்டை தயாராக உள்ள மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் போடவும்
  8. இருபுறமும் நன்றாக சிவந்தவுடன் பொரித்த வாழைப்பழத்தை எண்ணெயிலிருந்து எடுக்கவும்
  9. சூடாக தேநீர் உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்