வீடு / சமையல் குறிப்பு / வடா பாவ் ( மும்பை ஸ்பெஷல் )

Photo of Vada pav ( Mumbai special ) by Pavithra Prasad at BetterButter
385
0
0.0(0)
0

வடா பாவ் ( மும்பை ஸ்பெஷல் )

Mar-18-2019
Pavithra Prasad
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வடா பாவ் ( மும்பை ஸ்பெஷல் ) செய்முறை பற்றி

மும்பை தெரு கடை ஸ்டைல் சுவையான வடா பாவ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக்கிழங்கு 2 வேக வைத்தது
  2. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  3. பச்சை மிளகாய் ஒன்று
  4. மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. பெருங்காயப் பொடி ஒரு சிட்டிகை
  7. கடலைமாவு கலவையை உண்டாக்க தேவையானவை
  8. கடலை மாவு 4 டேபிள்ஸ்பூன்
  9. அரிசி மாவு 1 டேபிள் ஸ்பூன்
  10. மிளகாய் பொடி 1/2 டீஸ்பூன்
  11. மஞ்சள் பொடி 1/4 டீஸ்பூன்
  12. உப்பு தேவையான அளவு
  13. தண்ணீர் தேவையான அளவு
  14. எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
  15. பச்சைமிளகாய் தேவையான அளவு
  16. கிரீன் சட்னி உண்டாக்க தேவையானவை
  17. புதினா இலையை நன்றாக கழுவியது ஒரு கப்
  18. கொத்துமல்லி நன்றாக கழுவியது அரை கப்
  19. பச்சை மிளகாய் 2
  20. இஞ்சி சிறிய பீஸ்- 1
  21. உப்பு தேவையான அளவு
  22. பண் - 6

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் , கடுகு , இஞ்சிபூண்டு சிறிதாக அறிந்தது, மிளகாய், மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்
  2. அதில் தேவையான அளவு உப்பு, பெருங்காயம், உருளைக்கிழங்கு சேர்த்து மிக்ஸ் செய்து எடுக்கவும்
  3. அடுப்பில் இருந்து இறக்கவும்
  4. இனி கடலைமாவு கலவை உண்டாக்க , ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி பொடி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்
  5. இனி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கட்டை இல்லாமல் மிக்ஸ் செய்யவும்
  6. இனி எடுத்து வைத்த உருளைக்கிழங்கு கலவையை உருண்டைகளாக பிடித்து கடலைமாவு கலவையில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  7. நல்ல கோல்டன் பிரவுன் ஆகும்போது பொரித்து எடுக்கவும்
  8. அதே எண்ணெயில் பச்சை மிளகாயை பொரித்து எடுக்கவும்
  9. கிரீன் சட்னி உண்டாக்க தேவையானவை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக நைசாக அரைத்து எடுக்கவும்
  10. பரிமாறும்போது பண்ணை பகுதியாக முறித்து அதில் கிரீன் சட்னி தேய்த்து அதன் உள்ளே உருளையை , மிளகாய் வைத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்