வீடு / சமையல் குறிப்பு / பூனெ ஃபேமஸ் தந்தூரி டீ

Photo of Pune Famous Tandoori Tea by Aishwarya Rangan at BetterButter
413
1
0.0(0)
0

பூனெ ஃபேமஸ் தந்தூரி டீ

Mar-20-2019
Aishwarya Rangan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பூனெ ஃபேமஸ் தந்தூரி டீ செய்முறை பற்றி

பானை மிகவும் சூடாக இருக்கும், சூடான பானையில் செய்து வைத்திருந்த டீ சேர்க்கும் பொழுது மண்ணின் வாசத்துடன் தந்தூரி எபெக்ட் உடன் அருமையான டீ கிடைக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மகாராஷ்டிரம்
  • பாய்ளிங்
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பால் 1 கப்
  2. டீ தூள் 3 ஸ்பூன்
  3. சக்கரை 2ஸ்பூன்
  4. ஏலக்காய்-2
  5. இஞ்சி சிறிதளவு
  6. சிறிய மண் பானை

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பால் சேர்த்து பால் பொங்கும் பொழுது இரண்டு ஏலக்காய் இடித்து சேர்க்கவும்
  2. ஒரு சிறிய துண்டு இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம் நல்ல செரிமானத்திற்கு இஞ்சி மிகவும் உபயோகமானது
  3. 3 ஸ்பூன் டீ தூள் மற்றும் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கொள்ளலாம்
  4. டீ நன்றாக ஏலக்காய் மற்றும் இஞ்சியுடன் நன்றாக 5 நிமிடம் கொதிக்க விடுங்கள்
  5. இன்னொரு அடுப்பில் சிறிய மண்பானையை நன்றாக சூடு செய்யவும் அனைத்து திசைகளிலும் வைத்து சூடாக்கவும்
  6. டீ நன்றாக கொதித்தவுடன் ஒரு வடிகட்டி மூலமாக டீயை எடுத்துக் கொள்ளலாம்
  7. இப்போது ஒரு பாத்திரத்தில் அதன்மேல் நன்றாக சூடாக்கிய சிறிய மண்பானையை வைக்கவும்
  8. இப்போது செய்து வைத்திருந்த ஏலக்காய் இஞ்சி டீ சூடான மண்பானையில் சேர்க்கவும்
  9. மண் பானையில் மண் வாசத்துடன் அந்த சூட்டுடன், இஞ்சி ஏலக்காய் தந்தூரி டீ வீட்டிலேயே தயார் ஆகிவிட்டது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்