வீடு / சமையல் குறிப்பு / முட்டை மக்ரூனி

Photo of Egg spicy Macrooni by Bena Aafra at BetterButter
230
1
0.0(0)
0

முட்டை மக்ரூனி

Mar-20-2019
Bena Aafra
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முட்டை மக்ரூனி செய்முறை பற்றி

சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் உணவு...

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மக்ரூனி -1கப்
  2. முட்டை-2
  3. வெங்காயம் -2
  4. தக்காளி -1
  5. தக்காளி பியூரி-2ஸ்பூன்
  6. பச்சை மிளகாய் -3
  7. உப்பு-தேவைக்கேற்ப
  8. மிளகு தூள் -தேவைக்கேற்ப
  9. கறிவேப்பிலை-சிறிது
  10. கொத்தமல்லித்தழை
  11. மஞ்சள் தூள்-1/4டீஸ்பூன்
  12. சோயா சாஸ்-சிறிது
  13. குடை மிளகாய் -1/2
  14. எண்ணெய் அல்லது வெண்ணெய் (பட்டர்)

வழிமுறைகள்

  1. முதலில் மக்ரூனியை சுத்தம் செய்து கொள்ளவும் .
  2. பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி,சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
  3. வெந்ததும் தண்ணீர் வடித்து எடுத்துக்கொள்ளவும் .
  4. மற்றொரு பாத்திரம் வைத்து சிறிது வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்க்கவும் .
  5. அவற்றில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  6. சிறிது உப்பு ,மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும் .
  7. நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  8. பின்பு சோயா சீஸ்,தக்காளி பியூரி சேர்த்து கிளறி விடவும்.
  9. பின்பு நன்றாக வெந்ததும் முட்டை சேர்க்கவும் .
  10. மிளகு தூள் சேர்த்து நன்கு சுருள கிண்டவும்.
  11. இப்பொழுது வேகவைத்துள்ள மக்ரூனியை சேர்த்து கிளறவும்.
  12. கடைசியாக கறிவேப்பிலை,கொத்தமல்லி தூவி இறக்கவும்.
  13. சுவையான முட்டை மக்ரூனி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்