வீடு / சமையல் குறிப்பு / சென்னா சமோசா சாட்

Photo of Channa Samosa chat by Sowmya Sundar at BetterButter
99
2
0.0(0)
0

சென்னா சமோசா சாட்

Mar-22-2019
Sowmya Sundar
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சென்னா சமோசா சாட் செய்முறை பற்றி

மும்பையில் பிரபலமான தெரு கடை உணவான சன்னா சமோசா சாட் இப்போது தமிழ்நாட்டிலும் பிரபலமாகி விட்டது. செய்ய சிறிது நேரம் அதிகம் ஆனாலும் குழந்தைகள் விரும்பும் இதை வீட்டிலேயே சுகாதாரமான முறையில் செய்து தரலாம்.

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • மீடியம்
 • கிட்ஸ் ரெசிப்பிஸ்
 • நார்த் இந்தியன்
 • பிரெஷர் குக்
 • ப்லெண்டிங்
 • ஃபிரையிங்
 • ஸாட்டிங்
 • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. சன்னா மசாலா செய்ய:
 2. வெள்ளை கொண்டைக்கடலை ஒரு கப்
 3. பெரிய வெங்காயம் ஒன்று
 4. தக்காளி 2
 5. சீரகம் 1 டீஸ்பூன்
 6. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
 7. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
 8. மிளகாய்த்தூள்,மல்லித்தூள் தலா 1 டீஸ்பூன்
 9. ஆம்சூர் பொடி,சீரக பொடி,கரம் மசாலா தலா அரை டீஸ்பூன்
 10. கொத்தமல்லித்தழை சிறிது
 11. உப்பு ருசிக்கேற்ப
 12. எண்ணெய் ஒரு குழிக்கரண்டி
 13. சமோசா மேல் மாவு செய்ய:
 14. மைதா மாவு ஒரு கப்
 15. ரவை 1 டேபிள் ஸ்பூன்
 16. உப்பு சிறிதளவு
 17. எண்ணெய் பொரிக்க
 18. சமோசா மசாலா செய்ய :
 19. உருளைக்கிழங்கு 2
 20. உப்பு ருசிக்கேற்ப
 21. மிளகாய்த்தூள் ,மல்லித்தூள் ,கரம் மசாலாத்தூள் ,ஆம்சூர் பொடி தலா அரை டீஸ்பூன்
 22. பச்சை சட்னி செய்ய:
 23. புதினா ஒரு கைப்பிடி
 24. பச்சை மிளகாய் ஒன்று
 25. உப்பு தேவையான அளவு
 26. சீரகம் அரை டீஸ்பூன்
 27. சாட் மசாலா தூள் அரை டீஸ்பூன்
 28. சென்னா சமோசா அலங்கரிக்க :
 29. ஓமப்பொடி ஒரு கைப்பிடி
 30. பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒரு கைப்பிடி
 31. கொத்தமல்லித்தழை சிறிது

வழிமுறைகள்

 1. கொண்டைக்கடலையை எட்டு மணி நேரம் ஊறவைத்து பின் குக்கரில் வேக வைத்து வடிகட்டி கொள்ளுங்கள்
 2. கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
 3. பின் தக்காளி மற்றும் அனைத்து பொடிகளையும் சேர்த்து நன்கு வதக்கவும்
 4. இதனுடன் வேக வைத்த கொண்டைக்கடலை, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
 5. கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சன்னா மசாலா தயார்.
 6. சமோசா செய்ய மைதா மாவுடன் உப்பு,ரவை, ஒரு டீஸ்பூன் எண்ணெய்,தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
 7. உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து மசித்துக் கொள்ளவும் அதனுடன் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். சமோசா மசாலா தயார்.
 8. மாவை லேசாக திரட்டி சமோசா அச்சின் மீது வைத்து ஒரு டீஸ்பூன் மசாலா கலவையை வைத்து மூடவும். இதே போல் அனைத்தும் செய்து கொள்ளவும்
 9. எண்ணை காய்ந்ததும் சமோசாக்களை டீப் ப்ரை செய்து எடுத்துக் கொள்ளவும்
 10. பச்சைச் சட்னி செய்ய கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
 11. இப்போது ஒரு தட்டில் சமோசாகளை பிச்சு போடவும். அதன் மேல் சிறிது சன்னா மசாலாவை ஊற்றி பரப்பவும்.
 12. இனிமேல் அதன்மேல் ஒரு டீஸ்பூன் ஸ்பூன் பச்சை சட்னியை விட்டு நறுக்கிய வெங்காயம் ,ஓமப்பொடி தூவவும்.
 13. மேலே சிறிது சாட் மசாலா பொடி தூவினால் சுவையான சன்னா சமோசா சாட் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்