வீடு / சமையல் குறிப்பு / பாம்பே வெஜிடபிள் சாண்ட்விச்

Photo of Bombay Vegetable Sandwich by Sowmya Sundar at BetterButter
1061
1
0.0(0)
0

பாம்பே வெஜிடபிள் சாண்ட்விச்

Mar-23-2019
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாம்பே வெஜிடபிள் சாண்ட்விச் செய்முறை பற்றி

மும்பையில் பிரபலமான தெரு கடை உணவு இது . காய்கறிகள் சேர்த்து செய்த டபுள் டெக்கர் சாண்ட்விச் இது.சாண்ட்விச் பொடி முன்பே செய்து வைத்து கொண்டு தேவையான நேரம் பயன்படுத்தி கொள்ளலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • நார்த் இந்தியன்
  • பான் பிரை
  • ப்லெண்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரெட் துண்டுகள் 6
  2. வெண்ணெய் பிரட்டில் தடவ
  3. உருளைக்கிழங்கு 2
  4. வெங்காயம் 1
  5. தக்காளி 1
  6. பச்சை சட்னி செய்ய:
  7. புதினா 1 கப்
  8. பச்சை மிளகாய் 2
  9. சாட் மசாலா 1/2 டீஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. சீரகம் 1/4 டீஸ்பூன்
  12. சாண்ட்விச் மசாலா பொடி செய்ய:
  13. பட்டை 1 துண்டு
  14. சீரகம் 1 டீஸ்பூன்
  15. மிளகு 1 டீஸ்பூன்
  16. சாட் மசாலா பொடி 1 டேபிள் ஸ்பூன்
  17. சோம்பு 1 டீஸ்பூன்
  18. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பச்சை சட்னி செய்ய தேவையான பொருட்களை அரைத்து வைத்துக் கொள்ளவும்
  2. உருளைக்கிழங்கை வேக வைத்து வட்டமாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம், தக்காளியையும் வட்டமாக நறுக்கி கொள்ளவும்
  3. மசாலா பொடி செய்து தேவையான பொருட்களை வெறும் கடாயில் லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்
  4. பிரெட் துண்டுகளை வெண்ணை தடவி கொள்ளவும்
  5. ஒரு பிரெட் துண்டின் மேல் பச்சை சட்னியை தடவி அதன் மேல் உருளை துண்டு, வெங்காயம் வைத்து மசாலா பொடி தூவவும்
  6. அதன்மேல் மற்றொரு வெண்ணெய் தடவிய பிரெட் ஸ்லைஸை வைத்து மீண்டும் பச்சை சட்னியை தடவி வெங்காயம், தக்காளி துண்டுகளை வைக்கவும். மசாலா பொடி தூவி கொள்ளவும்
  7. இப்போது மற்றொரு வெண்ணெய் தடவிய பிரட்டால் மூடி டோஸ்ட் செய்யவும்
  8. கட் செய்து தக்காளி சாஸூடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்