Photo of Banana Fritters by Navas Banu L at BetterButter
202
0
0.0(0)
0

பழம் பொரி

Mar-25-2019
Navas Banu L
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பழம் பொரி செய்முறை பற்றி

" பழம் பொரி " (Banana Fritters ) தேவையான பொருட்கள் பழுத்த நேந்திரம் பழம் - 2 மைதாமாவு - 1/2 கப் அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூண் சீனி - 1 டேபிள் ஸ்பூண் மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை தண்ணீர் - பேட்டர் தயாரிப்பதற்கு பொரிப்பதற்க்கு தேவையான எண்ணெய் ( டீப் ஃப்ரை) செய்முறை : * ஒரு பாத்திரத்தில் மைதாமாவு,அரிசி மாவு,சீனி, மஞ்சள் பொடி, பேக்கிங் சோடா எல்லாம் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும். * இதனுடன் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து இட்டிலி மாவு பதத்திற்க்கு மாவை கலக்கி வைத்துக் கொள்ளவும். * பழத்தை தோலுரித்து இரண்டாக வெட்டி அதை மெல்லிய அகன்ற துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். * ஒரு கடாய் அடுப்பில் வைத்து பொரிப்பதற்க்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும், பழத் துண்டுகளை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எண்ணெயில் போடவும். * ஒரு பக்கம் வெந்ததும் மறித்துப் போடவும். * மறுபக்கமும் வெந்து கோல்டன் ப்ரவுன் கலரில் வரும் போது எண்ணெயில் இருந்து கோரி எடுக்கவும். * சாயாவுடன் பரிமாறவும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கேரளா

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பழுத்த நேந்திரம் பழம் -: 2
  2. மைதா மாவு - 1/2 கப்
  3. அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூண்
  4. சீனி - 1 டேபிள் ஸ்பூண்
  5. மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
  6. பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
  7. தண்ணீர் - பேட்டர் தயாரிப்பதற்க்கு
  8. பொரிப்பதற்க்கு தேவையான எண்ணெய் ( டீப் ஃப்ரை)

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு,சீனி,மஞ்சள் பொடி,பேக்கிங் சோடா எல்லாம் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.
  2. இதனுடன் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து இட்லி மாவு பதத்திற்க்கு மாவை கலக்கி வைத்துக் கொள்ளவும்.
  3. பழத்தை தோலுரித்து இரண்டாக வெட்டி அதை மெல்லிய அகன்ற துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  4. ஒரு கடாய் அடுப்பில் வைத்து பொரிப்பதற்க்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் பழத் துண்டுகளை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எண்ணெயில் போடவும்.
  5. ஒரு பக்கம் வெந்ததும் மறித்துப் போடவும்.
  6. மறு பக்கமும் வெந்து கோல்டன் ப்ரவுன் கலரில் வரும் போது எண்ணெயில் இருந்து கோரி எடுக்கவும்.
  7. டீ உடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்