வீடு / சமையல் குறிப்பு / குஜராத்தி பச்சை பட்டாணி குக்ரா சாட்

Photo of Gujarati Green Peas Ghughra Chat by Sowmya Sundar at BetterButter
785
1
0.0(0)
0

குஜராத்தி பச்சை பட்டாணி குக்ரா சாட்

Mar-25-2019
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குஜராத்தி பச்சை பட்டாணி குக்ரா சாட் செய்முறை பற்றி

குஜராத்தில் ஜாம்நகரின் தெருக்கடைகளில் மிகவும் பிரபலமாக கிடைக்கும் குக்ரா சாட். குக்ரா என்பது நம் ஊர் சோமாஸ் போன்றது.பச்சை பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து செய்த காரசாரமான ஸ்டஃப்பிங்குடன் வெளியே மொறுமொறுப்பாக இருக்கும் சாட் வகை இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • குஜராத்
  • ப்லெண்டிங்
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மேல் மாவிற்கு:
  2. மைதா மாவு 1 கப்
  3. ரவை 2 டேபிள்ஸ்பூன்
  4. எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  5. எலுமிச்சைச் சாறு ஒரு டீஸ்பூன்
  6. உப்பு ருசிக்கேற்ப
  7. தண்ணீர் தேவைக்கேற்ப
  8. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்
  9. ஸ்டப்பிங் செய்ய:
  10. பச்சை பட்டாணி ஒரு கப்
  11. வேக வைத்த உருளைக்கிழங்கு 2
  12. பச்சை மிளகாய் 2
  13. இஞ்சி ஒரு துண்டு
  14. கரம் மசாலா பொடி ஒரு டீஸ்பூன்
  15. உப்பு ருசிக்கேற்ப
  16. எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன்
  17. வெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  18. சீரகம் ஒரு டீஸ்பூன்
  19. பெருங்காயப்பொடி 1/4 டீஸ்பூன்
  20. பச்சைச் சட்னி செய்ய :
  21. கொத்தமல்லி புதினா தலா ஒரு கைப்பிடி
  22. பச்சை மிளகாய் 1
  23. இஞ்சி ஒரு துண்டு
  24. சாட் மசாலா 1/2 டீஸ்பூன்
  25. உப்பு தேவையான அளவு
  26. பேரிச்சை புளி சட்னி:
  27. கருப்பு பேரிச்சம்பழம் 8
  28. புளி கரைசல் 2 டேபிள்ஸ்பூன்
  29. உப்பு தேவையான அளவு
  30. மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்
  31. சீரக பொடி 1/4 டீஸ்பூன்
  32. சாட் அலங்கரிக்க:
  33. வெங்காயம் ஒன்று
  34. தக்காளி 1
  35. ஓமப்பொடி 1/4 கப்
  36. கொத்தமல்லி இலை சிறிதளவு
  37. சாட் மசாலா பொடி ஒரு டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் பச்சை சட்னி செய்ய கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் வைத்து கொள்ளவும்
  2. பேரிச்சை புளி சட்னி செய்ய கொடுத்துள்ள பொருட்களை அரைத்து தனியே வைத்து கொள்ளவும்
  3. மேல் மாவிற்கு தேவையான பொருட்களை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  4. பச்சை பட்டாணியை ஐந்து நிமிடம் கொதிக்கும் நீரில் போட்டு எடுக்கவும்
  5. பின் தண்ணீரை வடிகட்டி விட்டு அதனுடன் பச்சைமிளகாய் ,இஞ்சி, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும்
  6. கடாயில் வெண்ணெய் சேர்த்து சீரகம் தாளித்து அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.
  7. அதனுடன் கரம் மசாலா,மசித்த உருளைக்கிழங்கு, பெருங்காயம் சேர்த்து கிளறி இறக்கவும். எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும்
  8. மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி பூரி போல் தேய்த்து கொள்ளவும். பின் அதன் ஒரு பக்கத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு ஸ்டப்பிங்கை வைக்கவும்
  9. பின் மாவை மூடி ஓரங்களை அழுத்தி மடித்துக் கொள்ளவும். இதே போல் அனைத்தையும் செய்து கொள்ளவும்
  10. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஒவ்வொன்றாக சேர்த்து டீப் ஃப்ரை செய்து எடுத்துக் கொள்ளவும்
  11. ஒரு தட்டில் இரண்டு குக்ராவை நடுவே உடைத்து வைத்து அதில் ஒரு டீஸ்பூன் பேரிச்சை புளி சட்னி வைக்கவும்.
  12. பின் அதன் மேல் ஒரு டீஸ்பூன் பச்சைச் சட்னி வைத்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, ஓமப்பொடி,கொத்தமல்லி ,சாட் மசாலா பொடி தூவவும்.
  13. குஜராத் புகழ் தெரு கடை உணவு ஸ்பைசி குக்ரா சாட் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்