வீடு / சமையல் குறிப்பு / பாவ் பாஜி(காரசாரமான பாவ் பாஜி)

Photo of paav bhaji by Bena Aafra at BetterButter
3
2
0.0(0)
0

பாவ் பாஜி(காரசாரமான பாவ் பாஜி)

Mar-25-2019
Bena Aafra
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாவ் பாஜி(காரசாரமான பாவ் பாஜி) செய்முறை பற்றி

வடஇந்திய மக்கள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய சாட் வகைகளில் பாவ் பாஜி யும் ஒன்று.மிகவும் ஃபேமசான உணவு.....

செய்முறை டாக்ஸ்

 • மீடியம்
 • நார்த் இந்தியன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. பாவ் பன் செய்ய:::
 2. பன்-2
 3. பாவ் பன் மசாலா -சிறிது
 4. புதினா இலைகள் -பொடியாக நறுக்கியது
 5. பட்டர்-தேவையான அளவு
 6. மிளகாய் தூள்-1சிட்டிகை(ஒரு பன்னிற்கு)
 7. பாவ் மசாலா செய்வதற்கு::
 8. காளிஃப்ளவர்-1/2கப்
 9. பச்சைப்பட்டாணி-1/4கப
 10. உருளைக்கிழங்கு -3
 11. பெரிய வெங்காயம் -4
 12. பச்சை மிளகாய் -3
 13. தக்காளி-2
 14. தக்காளி பேஸ்ட்-4ஸ்பூன்
 15. கொத்தமல்லித்தழை-சிறிது
 16. புதினா-சிறிது
 17. பச்சை குடை மிளகாய் -1ஸ்பூன்
 18. சிவப்பு குடைமிளகாய்-1ஸ்பூன்
 19. மஞ்சள் குடைமிளகாய்-1ஸ்பூன்
 20. சீரக கீரை-1ஸ்பூன்
 21. வெங்காயத்தாள் -1ஸ்பூன்
 22. பாவ் மசாலா பொடி-2ஸ்பூன்
 23. மஞ்சள் தூள்-1/4டீஸ்பூன்
 24. உப்பு-தேவைக்கேற்ப
 25. பட்டர்-1 1/2ஸ்பூன்
 26. இஞ்சி பூண்டு விழுது-1 1/2ஸ்பூன்

வழிமுறைகள்

 1. பாவ்மசாலா செய்வதற்கு::
 2. காளிஃப்ளவர் சுத்தம் செய்து கொள்ளவும் .
 3. காளிஃப்ளவர்,பட்டாணி,உருளைக்கிழங்கு குக்கரில் வைத்து வேக வைத்து கொள்ளவும்.
 4. வெங்காயம் ,தக்காளி ,பச்சை மிளகாய் ,பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
 5. வெங்காயத்தாள்,கொத்தமல்லிஇலை,புதினா இலை,குடைமிளகாய்,சீரக கீரை, இவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 6. வாணலியை அடுப்பில் வைத்து பட்டர் சேர்க்கவும் .
 7. நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் .சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும் .
 8. மஞ்சள் தூள்,பாவ் மசாலா பொடி சேர்க்கவும் .
 9. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொள்ளவும்.
 10. தக்காளி சேர்த்து வதக்கவும் .
 11. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி,புதினா,குடைமிளகாய் சேர்த்து வதக்கவும் .
 12. நன்றா வதங்கியதும் வேகவைத்த காளிஃப்ளவர்,பட்டாணி,உருளைக்கிழங்கு சேர்க்கவும்.
 13. 1கப் தண்ணீர் ஊற்றவும் .உப்பு பார்த்து சேர்த்துக்கொள்ளவும்.
 14. நன்றாக தண்ணீர் வற்றியதும்,சுருள கிளறிவிட்டு கொத்தமல்லிஇலை சேர்த்து இறக்கவும் .
 15. பாவ் மசாலா தயார்.
 16. பாவ் பாஜி செய்வதற்கு ::
 17. அடுப்பில் தவா வைத்து பட்டர் சேர்த்து மிளகாய்தூள்,பாவ் மசாலாபொடி ,புதினா இலை சேர்க்கவும்.
 18. பன்னை இரண்டாக கீறிவிட்டு அதன்மேல் வைக்கவும் .
 19. அவற்றை திருப்பிப்போட்டு எடுக்கவும்.
 20. பாவ் பாஜி ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்