வீடு / சமையல் குறிப்பு / பனீர் சுர் சுர் நாண் ( தில்லி மற்றும் அம்ரிஸ்தர் தெருக்கடை உணவு)

Photo of Paneer Chur Chur Naan( Delhi and Amritsar Street Food) by Sowmya Sundar at BetterButter
36
1
0.0(0)
0

பனீர் சுர் சுர் நாண் ( தில்லி மற்றும் அம்ரிஸ்தர் தெருக்கடை உணவு)

Mar-27-2019
Sowmya Sundar
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பனீர் சுர் சுர் நாண் ( தில்லி மற்றும் அம்ரிஸ்தர் தெருக்கடை உணவு) செய்முறை பற்றி

பனீர் மசாலா அடைத்து செய்த சுர் சுர் நாண் தில்லி மற்றும் அம்ரிஸ்தரில் மிகப் பிரபலமான தெரு கடை உணவு .

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • மீடியம்
 • பஞ்சாபி
 • பான் பிரை
 • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. மாவு பிசைய:
 2. மைதா மாவு ஒரு கப்
 3. பால் பவுடர் ஒரு டேபிள்ஸ்பூன்
 4. உப்பு ருசிக்கேற்ப
 5. பேக்கிங் பவுடர் 1/4 டீஸ்பூன்
 6. தயிர் 2 டேபிள் ஸ்பூன்
 7. சர்க்கரை 1/4 டீஸ்பூன்
 8. நெய் ஒரு டேபிள்ஸ்பூன்
 9. தண்ணீர் 1/4 கப் + 1 டேபிள் ஸ்பூன்
 10. ஸ்டஃப்பிங் செய்ய:
 11. பனீர் 1 கப்
 12. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
 13. கொத்தமல்லித்தழை கைப்பிடி அளவு
 14. உப்பு ருசிக்கேற்ப
 15. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
 16. தனியாத்தூள்,கரம் மசாலா, சீரக பொடி, ஆம்சூர் பொடி தலா அரை டீஸ்பூன்
 17. மற்ற பொருட்கள் :
 18. நெய் சுமார் 3 டேபிள்ஸ்பூன் அளவு
 19. கருஞ்சீரகம் ஒரு டேபிள்ஸ்பூன்
 20. கசூரி மேத்தி ஒரு டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

 1. முதலில் ஸ்டஃப்பிங் செய்ய பனீர் உதிர்த்து பின் வெங்காயம், கொத்தமல்லி மற்றும் கொடுத்துள்ள அனைத்து பொடிகளையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
 2. மைதாவுடன் மாவு பிசைய தேவையான பொருட்களை சேர்த்து நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விட்டு கொள்ளவும். மாவு தளர்வாக இருப்பது நலம்.
 3. பிசைந்த மாவு முழுவதையும் கையால் நன்கு தட்டி அதன் மேல் ஒரு டீஸ்பூன் ஸ்பூன் நெய்யை தடவவும்.
 4. பின் அதை இரண்டாக மடக்கி சுருட்டவும். மறுபடியும் ஒரு டீஸ்பூன் நெய் தடவிய மேலும் ஒரு முறை சுருட்டி கொள்ளவும்
 5. இப்போது இதை சமமான பங்காக கட் செய்து உருட்டிக் கொள்ளவும்
 6. ஒரு உருண்டையை எடுத்து கையால் தட்டி அதன் நடுவில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு ஸ்டப்பிங் வைத்து மூடவும்
 7. மூடியதை சிறிது கனமாக கையால் தட்டி கொள்ளவும் .அதன் மேல் சிறிது கருஞ்சீரகம் மற்றும் கசூரி மேத்தி வைத்து அழுத்தி கொள்ளவும்
 8. இதேபோல் அனைத்தையும் செய்து கொள்ளவும்
 9. கைப்பிடியுடன் கூடிய சூடான இரும்பு தவாவில் நானில் அடி பக்கம் தண்ணீர் தடவி ஒட்டி கொள்ளவும்
 10. இரண்டு நிமிடங்கள் வெந்ததும் அதை தவாவோடு தணலில் திரும்பிக் காட்டி மிதமான தீயில் மற்றொரு பக்கம் வேக வைக்கவும்
 11. வெந்ததும் மேலே சிறிது நெய் தடவி கையால் ஒரங்களை அழுத்தவும். இப்படி செய்வதால் லேயர் லேயராக பிரியும். பனீர் சுர்சுர் நாண் தயார்.சூடான தால் உடன் பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்