வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் ஷவர்மா

Photo of Chicken Shawarma by Ayesha Shifa at BetterButter
11
0
0.0(0)
0

சிக்கன் ஷவர்மா

Mar-27-2019
Ayesha Shifa
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் ஷவர்மா செய்முறை பற்றி

துருக்கி நாட்டின் பாரம்பரியமான ரோட்டுக்கடை ஸ்பெஷல் சவர்மா

செய்முறை டாக்ஸ்

 • நான் வெஜ்
 • மீடியம்
 • டின்னெர் பார்ட்டி
 • முகலாய்
 • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. சவர்மா ரொட்டி செய்ய தேவையான பொருள்கள்
 2. மைதா 300 கிராம்
 3. ட்ரை ஈஸ்ட் ஒரு டீஸ்பூன்
 4. சர்க்கரை ஒரு டேபிள்ஸ்பூன்
 5. உப்பு அரை டீஸ்பூன்
 6. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
 7. வெதுவெதுப்பான தண்ணீர் தேவையான அளவு
 8. சிக்கனை மேரினேட் செய்ய தேவையான பொருட்கள்
 9. எலும்பில்லாத சிக்கன் ப்ரெஸ்ட் 300 கிராம் இரண்டாக slice செய்தது
 10. ஒரு டீஸ்பூன் சீரகப் பொடி
 11. ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள்
 12. அரை டீஸ்பூன் ஏலக்காய் தூள்
 13. அரை டீஸ்பூன் பட்டை பொடி
 14. ஒரு டீஸ்பூன் இஞ்சி விழுது
 15. ஒரு டீஸ்பூன் பூண்டு விழுது
 16. ஒரு டீஸ்பூன் அரைத்த பச்சைமிளகாய் விழுது
 17. ஒரு டேபிள்ஸ்பூன் கார்லிக் மயோனைஸ்
 18. தேவையான அளவு உப்பு
 19. ஷவர்மா செய்வதற்கு தேவையான காய்கறிகள்
 20. நீளவாக்கில் நறுக்கிய முட்டைகோஸ் அரை கப்
 21. நீளவாக்கில் நறுக்கிய வெள்ளரி அரை கப்
 22. நீளவாக்கில் நறுக்கிய குடை மிளகாய் கால் கப்
 23. ஒரு தக்காளி விதை நீக்கி நீளவாக்கில் நறுக்கியது
 24. கார்லிக் மயோனைஸ் செய்ய தேவையான பொருட்கள்
 25. நான்கு பல் பூண்டு பொடிதாக நறுக்கியது
 26. கால் டீஸ்பூன் உப்பு
 27. 100 மில்லி சன்பிளவர் ஆயில்
 28. எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன்
 29. ஒரு முட்டையின் வெள்ளை கரு
 30. சவர்மா ரோல் செய்வதற்கு பட்டர் பேப்பர் 4
 31. எண்ணெய் சிறிதளவு சிக்கன் பொறிப்பதற்கு

வழிமுறைகள்

 1. சவர்மா ரொட்டி செய்ய முதலில் ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் மைதா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
 2. மற்றொரு சிறிய பாத்திரத்தில் ட்ரை ஈஸ்ட் ,சர்க்கரை, ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்
 3. கலக்கிய ஈஸ்ட் கலவையை 10 நிமிடங்களுக்கு பிறகு மைதா மற்றும் உப்பு கலவையுடன் சேர்த்து நன்கு கிளறவும்
 4. பின் அதனுடன் எண்ணெய் சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு கிளறவும்
 5. இப்போது தேவையான அளவு வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து மாவை ஒரு சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொண்டு வரவும்
 6. ஒரு எண்ணை தடவிய பவுலில் பிசைந்த மாவை மாற்றி அதை நன்கு ஒரு இறுக்கமான மூடி போட்டு மூடி வைக்கவும். 3 மணிநேரம் அப்படியே மாவை ஊற விடவும்.
 7. 3 மணி நேரத்திற்குப் பிறகு திறந்து பார்த்தால் மாவு இரட்டிப்பாகி இருக்கும்
 8. ஊறிய மாவை சிறிது மைதா மாவு சேர்த்து நன்கு மீண்டும் பிசையவும்
 9. ஒவ்வொரு உருண்டைகளாக ஒரு மீடியம் சைஸ் சப்பாத்தி அளவிற்கு கைகளாலேயே பரப்பவும்.
 10. ஒரு தோசைக்கல்லை சூடுபடுத்தி மிதமான தீயில் வைத்து ஒரு ஒரு ஷவர்மா ரொட்டியாக சுட்டு எடுக்கவும்.லேசாக மேலே எண்ணெய் தடவிக் கொள்ளலாம்.
 11. கார்லிக் மயோனைஸ் செய்வதற்கு முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய பூண்டு, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து முதலில் நன்கு அடிக்கவும்.
 12. பின் முட்டையின் வெள்ளை கரு முழுவதையும் சேர்த்து, சுன்ஃபிளவர் ஆயில் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு அடிக்கவும். கெட்டியானதும் கார்லி மயொன்னைஸ் ரெடி.
 13. சிக்கனை மேரினேட் செய்வதற்கு ஒரு பௌலில் சிக்கன், சீரகப்பொடி, மிளகு தூள், பட்டை பொடி, ஏலக்காய் தூள், இஞ்சி விழுது, பூண்டு விழுது, மிளகாய் விழுது, உப்பு, மயொண்ணைஸ் சேர்த்து நன்கு கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்
 14. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து ஊறிய சிக்கனை பொரித்து( Shallow fry) எடுக்கவும். 5 நிமிடம் ஒரு புறமும் 5 நிமிடம் மற்றொரு புறமும் வேகவைத்து எடுக்கவும்.
 15. பொரித்தெடுத்து சிக்கனை நீளவாக்கில் ஸ்லைஸ் ( slice) செய்யவும்
 16. இப்போது ஷவர்மா அடக்கம் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் நறுக்கிய முட்டைகோஸ், கேப்ஸிகம், வெள்ளரி, தக்காளி, சிக்கன், கார்லிக் மயொன்னைஸ் (4 முதல் 8 டேபிள்ஸ்பூன்) சேர்த்து நன்கு கிளறவும்.
 17. தயார்படுத்தி வைத்துள்ள சவர்மா ரொட்டியை ஒரு பட்டர் பேப்பர் மேலே வைத்து அதன் மேலே ஒரு டேபிள்ஸ்பூன் மயிண்ணைஸ் தடவவும்
 18. அதன் மேலே ஒரு ஓரத்தில் ஷவர்மா அடக்கதிலிருந்து 4 டேபிள்ஸ்பூன் எடுத்து வைக்கவும்
 19. ஓரத்திலிருந்து பட்டர் பேப்பரோடு சேர்த்து அப்படியே சுருட்டி கீழேயும் மேலேயும் நன்கு லாக் செய்து பரிமாறினால் சுவையான ஷவர்மா ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்