வீடு / சமையல் குறிப்பு / கையேந்தி பவன் மட்டன் பிரியாணியும் நாட்டுக் கோழி குழம்பும் !

Photo of KAI YENDHI BHAVAN MUTTON BIRIYANI WITH COUNTRY CHICKEN GRAVY ! by Ramani Thiagarajan at BetterButter
731
2
0.0(0)
0

கையேந்தி பவன் மட்டன் பிரியாணியும் நாட்டுக் கோழி குழம்பும் !

Mar-28-2019
Ramani Thiagarajan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கையேந்தி பவன் மட்டன் பிரியாணியும் நாட்டுக் கோழி குழம்பும் ! செய்முறை பற்றி

சேலம் பகுதியில் கையேந்தி பவன் மட்டன் பிரியாணியும் நாட்டுக் கோழி குழம்பும் மிகவும் பிரசித்தமானது. வீட்டுப் பெண்களால் தயாரிக்கப்படுவதால் மிகவும் சுத்தமாகவும் வீட்டுச் சுவையுடனும் இருக்கும். மாலை நேரத்தில் தெருக்களில் பரபரப்பாக விற்கப்படும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • பிரெஷர் குக்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கறி ( Mutton)-500 grams
  2. நாட்டுக் கோழி - 500 grams
  3. சீரக சம்பா அரிசி- 500 grams
  4. கெட்டித் தயிர் -1 கிண்ணம்
  5. பச்சை மிளகாய் -4
  6. கல் உப்பு - ருசிக்கு தகுந்த அளவு
  7. சிறிய வெங்காயம் - 500 grams
  8. நாட்டு தக்காளி -50 grams
  9. பொதினா தழை -ஒரு சிறிய கட்டு
  10. பொடியாக நறுக்கிய கொத்துமல்லி இலை- ஒரு சிறிய கட்டு
  11. பொடியாக நறுக்கிய கறி வேப்பிலை -2 இனுக்கு
  12. பிரிஞ்சி இலை -3
  13. கெட்டி தேங்காய்ப் பால் - 2 கிண்ணம்
  14. தேங்காய் அரைத்த விழுது- 4 மேஜைக் கரண்டி
  15. மிளகு பூண்டு வறுத்து அரைத்த விழுது- 2 மேஜைக் கரண்டி
  16. நெய் 4 மேஜைக் கரண்டி
  17. நல்லெண்ணெய் -4 மேஜைக் கரண்டி
  18. எலுமிச்சை பழம் - 1
  19. லவங்கம் -6
  20. சோம்பு -2 தேக்கரண்டி
  21. பட்டை -4 துண்டுகள்
  22. கொத்துமல்லி விதை வறுத்து அரைத்த விழுது- 4 மேஜைக் கரண்டி
  23. கரம் மசாலா தூள்-2 மேஜைக் கரண்டி
  24. மஞ்சள் தூள் -2 மேஜைக் கரண்டி
  25. சோம்பு தூள்-2 மேஜைக் கரண்டி
  26. பூண்டு -4 முழு பூண்டு
  27. இஞ்சி- 2
  28. சிகப்பு மிளகாய் அரைத்த விழுது- 3 மேஜைக் கரண்டி

வழிமுறைகள்

  1. கறியையும், நாட்டுக் கோரும் துண்டுகளையும் நன்கு கழுவி மஞ்சள் தூள்,கல் உப்பு சேர்த்து நன்கு பிசறி விடவும்.
  2. காய்ந்த மிளகாய் விழுது,இஞ்சி பூண்டு விழுது,1/2 கிண்ணம் கெட்டித் தயிர் சேர்த்து பிரட்டி வைக்கவும்.
  3. சீரக செம்பா அரிசியை ஊற வைக்கவும்.
  4. ஒரு பாத்திரத்தில் 2 மேஜைக் கரண்டி எண்ணெய், ஒரு மேஜைக் கரண்டி நெய் சேர்த்து சூடாக்கவும்.
  5. அதில் முழு கரம் மசாலாக்களை பிரிஞ்சி இலையுடன் சேர்த்து வதக்கவும்.
  6. இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  7. கரம் மசாலா தூள்,சோம்பு தூள், மஞ்சள் தூள், ஊற வைத்த அரிசி சேர்த்து வதக்கவும்.
  8. கறி வேப்பிலை,கொத்துமல்லி இலை,பொதினா சேர்த்து வதக்கவும்.
  9. ஊறிய கறியை ஒரு குக்கரில் 1 மேஜைக் கரண்டி எண்ணெயில் வதக்கி 2 கிண்ணம் தண்ணீர் சேர்த்து 4 விசில் விட்டு பாதி வேக்காடு வேக வைக்கவும்.
  10. கறியை மசாலாக்களுடன் சேர்த்து வதக்கவும் .
  11. நன்கு வதங்கிய பின் அரிசியை சேர்த்து வதக்கவும்.
  12. கறி வெந்த தண்ணீர், தேங்காய்ப் பால், அரிசி ஊற வைத்த தண்ணீர் எல்லாம் சேர்த்து சூடாக்கவும்.
  13. எல்லாம் சேர்ந்து 4 கிண்ணம் அளவிற்கு நன்கு கொதிக்கும் தண்ணீரை அரிசியுடன் சேர்க்கவும் .
  14. எலுமிச்சம் பழம் பிழிந்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி மூடி வைக்கவும்.
  15. தணலை குறைத்து வைத்து வேகவிடவும்.
  16. ஒரு தட்டில் நெருப்பு கங்குகளை வைத்து தம்மில் வைக்கவும்.
  17. சுவை மிக்க கறி பிரியாணி தயார்.
  18. உப்பு, இஞ்சி பூண்டு விழுதில் ஊறி இருக்கும் நாட்டுக் கோழியை ஒரு பாத்திரதில் 2 மேஜைக் கரண்டி எண்ணெயை சூடாக்கி அதில் சேர்க்கவும்.
  19. பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  20. அதனுடன் கொத்துமல்லி விதை விழுது,காய்ந்த மிளகாய் விழுது,மஞ்சள் தூள், மிளகு பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  21. தக்காளி சேர்த்து வதக்கவும்.
  22. கொத்துமல்லி , கறி வேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  23. கோழி நன்கு வெந்தவுடன் தேங்காய் அரைத்த விழுது, தேங்காய்ப் பால் சேர்த்து கொதி வரும் போது இறக்கி வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்