வீடு / சமையல் குறிப்பு / தஹி பூரி(மும்பை தெருக்கடை உணவு)

Photo of Dahi Puri(Mumbai Street Food) by Jayasakthi Ekambaram at BetterButter
450
0
0.0(0)
0

தஹி பூரி(மும்பை தெருக்கடை உணவு)

Mar-28-2019
Jayasakthi Ekambaram
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தஹி பூரி(மும்பை தெருக்கடை உணவு) செய்முறை பற்றி

மினி பூரியுடன் உருளைக்கிழங்கு மசாலா, தயிர் சேர்த்து செய்யும் சாட்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • மகாராஷ்டிரம்
  • பான் பிரை
  • பிரெஷர் குக்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மைதா 100 கிராம்
  2. ரவை 50 கிராம்
  3. உருளைக்கிழங்கு கால் கிலோ
  4. வெங்காயம் 2
  5. தக்காளி ஒன்று
  6. கொத்தமல்லி அரை கட்டு
  7. பச்சை மிளகாய் 4
  8. புளி நெல்லிக்காய் அளவு
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணை தேவையான அளவு
  11. சர்க்கரை 2 டீஸ்பூன்
  12. மிளகாய் தூள் அரை டீஸ்பூன்
  13. சாட் மசாலா அரை டீஸ்பூன்
  14. புளி சட்னி 2 டீஸ்பூன்
  15. சாட் மசாலா ஒரு டீஸ்பூன்
  16. தயிர் 100 ml
  17. கரம் மசாலா தூள் அரை ஸ்பூன்
  18. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  19. ஓமப் பொடி 100 கிராம்

வழிமுறைகள்

  1. மைதா மாவு ரவை கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  2. இந்த மாவை 15 நிமிடம் ஊற வைத்து அதற்குப் பிறகு பெரிய பூரியாக திரட்டி அதை சிறிய மூடி வைத்து மினி பூரியாக கட் செய்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  3. கொத்தமல்லி தழையுடன் 2 பச்சை மிளகாய் புளித்தண்ணீர் உப்பு தூள் சேர்த்து சட்னியாக அரைத்து கொள்ளவும்
  4. உருளைக்கிழங்கை குக்கரில் வேகவைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும்
  5. ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து வெங்காயம் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிய இஞ்சி கரம் மசாலா மிளகாய் தூள் உப்பு தூள் சேர்த்து நன்றாக கிளறி பச்சை வாசனை போனவுடன் இறக்கி வைக்கவும்
  6. பொரித்தெடுத்த மினி பூரியை நடுவில் துளை போட்டு அதில் உருளைக்கிழங்கு மசாலாவை வைக்கவும்
  7. தயிருடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்
  8. பூரியின் மேல் தயிரை ஊற்றி பிறகு கொத்தமல்லி சட்னி புளி சட்னி ஊற்றவும்
  9. ஓமப்பொடியை மேலே தூவவும்
  10. மிளகாய் தூள் சாட் மசாலா தூள் தூவவும்
  11. பச்சைக் கொத்தமல்லியைத் தூவவும்
  12. இப்போது சுவையான தஹி பூரி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்