வீடு / சமையல் குறிப்பு / சாலையோர உணவு வகைகள்

Photo of Roadside food by sudha rani at BetterButter
27
0
0.0(0)
0

சாலையோர உணவு வகைகள்

Mar-29-2019
sudha rani
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

சாலையோர உணவு வகைகள் செய்முறை பற்றி

பொதுவாக சாலையோரங்களில் சின்ன கடையோ பெரிய கடையோ பார்த்தாலே சாப்பிட தோன்றும் அதுல ஒரு சில உணவுகளுக்கு நம்மில் பலபேர் ரசிகர்கள் என்றே சொல்லலாம் அந்த மாதிரி ஒரு சில உணவுகளில் என்னால முடிந்த எனக்கு செய்ய தெரிந்த என்னோட குடும்பத்திற்கு விருப்பமான சில உணவுகளை இங்கு செய்து உள்ளேன்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • கிட்டி பார்ட்டிஸ்
 • நார்த் இந்தியன்
 • மெயின் டிஷ்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

 1. மிஷ்ஷல் பாவ்:
 2. பாவ் பன் 4
 3. பட்டர் 4 டேபிள்ஸ்பூன்
 4. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
 5. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
 6. பாவ் பாஜி மசாலா தூள் 1/4 ஸ்பூன்
 7. பாவ் பாஜி மசாலா தூள் செய்வதற்கு:
 8. கொத்தமல்லி விதை 2 டேபிள்ஸ்பூன்
 9. வெள்ளை எள் 1 டேபிள்ஸ்பூன்
 10. பட்டை 6
 11. கிராம்பு 6
 12. ஏலக்காய் 6
 13. பிரியாணி இலை 6
 14. அன்னாச்சி மொக்கு 6
 15. கல்பாசி சிறிது
 16. ஷாஜீரா 1/2 ஸ்பூன்
 17. சீரகம் 1 ஸ்பூன்
 18. மிளகு 1 ஸ்பூன்
 19. கசகசா 1 ஸ்பூன்
 20. டெசிகேடட் கோகனட் பவுடர் 3 ஸ்பூன்
 21. வரமிளகாய் 4
 22. காஷ்மீர் மிளகாய் 6
 23. மிஷ்ஷல் செய்ய பேஸ்ட்:
 24. பட்டர் 3 டேபிள்ஸ்பூன்
 25. வெங்காயம் 2
 26. தக்காளி 4
 27. கொப்பரை தேங்காய் துண்டுகள் 10பீஸ்
 28. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
 29. தனியாத்தூள் 2 ஸ்பூன்
 30. சீரகத்தூள் 2 ஸ்பூன்
 31. தஹி எனப்படும் கிரேவி செய்ய:
 32. பட்டர் 2 ஸ்பூன்
 33. சிவப்பு மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
 34. அரைத்த விழுது 1/4 கப்
 35. சர்க்கரை 2 ஸ்பூன்
 36. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
 37. பாவ் பாஜி மசாலா தூள் 1 ஸ்பூன்
 38. உப்பு தேவையான அளவு
 39. கொத்தமல்லி தழை சிறிது
 40. மிஷ்ஷல் செய்வதற்கு:
 41. பட்டர் 6 ஸ்பூன்
 42. கடுகு 1 ஸ்பூன்
 43. பொடியாக நறுக்கிய வெங்காயம் 1
 44. கறிவேப்பிலை சிறிது
 45. அரைத்த விழுது 1/2 கப்
 46. முளைகட்டி வேகவைத்த பச்சை பயறு 1/2 கப்
 47. வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு 2
 48. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
 49. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
 50. பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
 51. பாவ் பாஜி மசாலா தூள் 3 ஸ்பூன்
 52. உப்பு தேவையான அளவு
 53. பரிமாறுவதற்கு:
 54. பொடியாக நறுக்கிய வெங்காயம் சிறிது
 55. கொத்தமல்லி தழை சிறிது
 56. துருவிய கேரட் சிறிது
 57. ஓமப்பொடி சிறிது
 58. லெமன் சாறு அல்லது லெமன் துண்டு
 59. பேல்பூரி செய்ய:
 60. பொரி 2 கப்
 61. துருவிய கேரட் 2 டேபிள்ஸ்பூன்
 62. பானிபூரி 20
 63. பொடியாக நறுக்கிய வெங்காயம் 1
 64. உருளைக்கிழங்கு 2
 65. கருப்பு உப்பு 1/4 ஸ்பூன்
 66. லெமன் சாறு 1/2 ஸ்பூன்
 67. உப்பு தேவையான அளவு
 68. கொத்தமல்லி தழை சிறிது
 69. பானிபூரி குழம்பு தேவையான அளவு
 70. பானிபூரி செய்ய:
 71. சீரோட்டி ரவை 1 கப்
 72. மைதா 1/4 கப்
 73. வறுத்து அரைத்த உளுந்து மாவு 1 ஸ்பூன்
 74. பேக்கிங் சோடா 1 சிட்டிகை
 75. பேக்கிங் பவுடர் 1 சிட்டிகை
 76. உப்பு தேவையான அளவு
 77. எண்ணெய் பொரிப்பதற்கு
 78. பானிபூரி குழம்பு செய்வதற்கு:
 79. கடலைமாவு 1/4 கப்
 80. அரிசி மாவு 2 ஸ்பூன்
 81. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
 82. பட்டை 2
 83. கிராம்பு 2
 84. ஏலக்காய் 2
 85. பச்சை மிளகாய் 6
 86. புதினா 1/2 கட்டு
 87. கொத்தமல்லி தழை 1/2 கட்டு
 88. கரம் மசாலா தூள் 1 ஸ்பூன்
 89. சாட் மசாலா தூள் 1/2 ஸ்பூன்
 90. சிக்கன் தூள் 2ஸ்பூன்
 91. கருப்பு உப்பு 1/2 ஸ்பூன்
 92. உப்பு தேவையான அளவு
 93. எண்ணெய் சிறிது
 94. கறிவேப்பிலை சிறிது
 95. பட்டாணி சுண்டல்:
 96. பட்டாணி 1 கப்
 97. எண்ணெய் 3 ஸ்பூன்
 98. கடுகு 1 ஸ்பூன்
 99. பொடியாக நறுக்கிய வெங்காயம் 2 ஸ்பூன்
 100. துருவிய கேரட் 2 ஸ்பூன்
 101. துருவிய மாங்காய் 2 ஸ்பூன்
 102. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
 103. கறி மசாலா தூள் 2 ஸ்பூன்
 104. மிளகுத்தூள் 1/4 ஸ்பூன்
 105. சீரகத்தூள் 1/4 ஸ்பூன்
 106. கருப்பு உப்பு 2 சிட்டிகை
 107. உப்பு தேவையான அளவு
 108. காளான் மசாலா செய்ய:
 109. துருவிய முட்டை கோஸ் 1/4 கப்
 110. பொடியாக நறுக்கிய காளான் 1/4 கப்
 111. உப்பு தேவையான அளவு
 112. மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
 113. கரம் மசாலா தூள் 2 ஸ்பூன்
 114. மைதா 1/4 கப்
 115. கார்ன்ப்ளார் 1/8கப் +2 ஸ்பூன்
 116. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
 117. துருவிய கேரட் 2 ஸ்பூன்
 118. வெங்காயம் 2
 119. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
 120. பச்சை மிளகாய் 1
 121. கறிவேப்பிலை சிறிது
 122. சோயா சாஸ் 2 ஸ்பூன்
 123. தக்காளி சாஸ் 2 ஸ்பூன்
 124. கொத்தமல்லி தழை சிறிது
 125. எண்ணெய் தேவையான அளவு
 126. செஸ்வான் வெஜ் நூடுல்ஸ்:
 127. பிளெயின் நூடுல்ஸ் 200 கிராம்
 128. வெங்காயம் 1
 129. கேரட் 1
 130. கோஸ் 4 டேபிள்ஸ்பூன்
 131. எண்ணெய் தேவையான அளவு
 132. உப்பு தேவையான அளவு
 133. சோயா சாஸ் 1 ஸ்பூன்
 134. தக்காளி சாஸ் 1 ஸ்பூன்
 135. வரமிளகாய் 6
 136. பூண்டு 8 பல்
 137. ஜிகர்தண்டா:
 138. பால் 1/2 லிட்டர்
 139. மில்க்மெயின்ட் 4 டேபிள்ஸ்பூன்
 140. பால் கோவா 30 கிராம்
 141. ப்ரஷ் க்ரீம் 2 ஸ்பூன்
 142. பாதாம் பிசின் 4
 143. நன்னாரி தண்டு 2
 144. சர்க்கரை 1/4 கப்
 145. வெனிலா ஐஸ்க்ரீம் 2 ஸ்கூப்
 146. பலூடா:
 147. பால் 1/2 லிட்டர்
 148. மில்க்மெயின்ட் 6 டேபிள்ஸ்பூன்
 149. பால் கோவா 30 கிராம்
 150. ப்ரஷ் க்ரீம் 2 ஸ்பூன்
 151. ரோஸ் வாட்டர் 1 ஸ்பூன்
 152. சேமியா 6 ஸ்பூன்
 153. பொடியாக நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் 2 ஸ்பூன்
 154. கரகரப்பாக உடைத்த நட்ஸ் 2 ஸ்பூன்
 155. சப்ஜா விதை 2 ஸ்பூன்
 156. ரோஸ் சிரப் 4 டேபிள்ஸ்பூன்
 157. வெனிலா ஐஸ்க்ரீம் 2 ஸ்கூப்
 158. ரோஸ் மில்க்:
 159. பால் 1 கப்
 160. ப்ரஷ் க்ரீம் 1/4 கப்
 161. சர்க்கரை 2ஸ்பூன்
 162. மில்க்மெயின்ட் 2 ஸ்பூன்
 163. ஐஸ்கிரீம் 2 கப்
 164. ஹெர்ஷிஸ் ரோஸ் சிரப் 1/4 கப்
 165. ரோஸ் வாட்டர் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

 1. மிஷ்ஷல் பாவ்:
 2. பாவ் ரெசிப்பிய பொறுத்தவரை பட்டர் மிகவும் முக்கியமானது
 3. பாவ் பாஜி மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தனித்தனியாக வெறும் வாணலியில் போட்டு வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக பொடித்து வைத்துக் கொள்ளவும்
 4. மசாலா பேஸ்ட் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் பட்டர் விட்டு சூடானதும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்
 5. பின் சிறிது தண்ணீர் விட்டு நன்கு வேகவைத்து மசித்து கொள்ளவும் இந்த மசாலா இந்த மாதிரி கலரில் இருக்க வேண்டும்
 6. தஹீ எனப்படும் தண்ணீர் கிரேவி செய்ய வாணலியில் பட்டர் விட்டு சூடானதும் மிளகாய் தூள் சேர்த்து உடனடியாக அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்
 7. பின் சர்க்கரை உப்பு மஞ்சள் தூள் பாவ் பாஜி மசாலா தூள் சேர்த்து வதக்கவும்
 8. பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
 9. நன்கு கொதித்து சற்று திக்காக வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
 10. மிஷ்ஷல் செய்ய வாணலியில் பட்டர் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
 11. பின் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்
 12. பின் வேகவைத்த முளைகட்டிய பயறு சேர்த்து வதக்கவும்
 13. பின் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்
 14. பின் கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
 15. தோசை கல்லை வைத்து சூடாக்கி அதில் பட்டர் விட்டு மிளகாய் தூள் மஞ்சள் தூள் பாவ் பாஜி மசாலா தூள் சேர்த்து பன்னை டோஸ்ட் செய்து கொள்ளவும்
 16. பரிமாறும் முறை:
 17. ஒரு தட்டில் டோஸ்ட் செய்த பாவை வைத்து ஒரு கப்பில் தண்ணீர் கிரேவி ஊற்றி வைத்து பின்
 18. தனியாக மிஷ்ஷல்லை ஊற்றி அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம் துருவிய கேரட் கொத்தமல்லி தழை ஓமப்பொடி தூவி லெமன் சாறு பிழிந்து விட்டு பரிமாறவும்
 19. குறிப்பு:
 20. இதே போல முளைகட்டிய பயறு பதில் வெஜிடபிள் மற்றும் வேகவைத்து நறுக்கிய முட்டை ,சிக்கன் கொத்துகறி, பனீர் துண்டுகள் சேர்த்து இப்படி பலவிதமான டிஷ் செய்யலாம்
 21. பேல்பூரி:
 22. பானிபூரியையும் ,குழம்பும் செய்து வைத்து கொண்டு பரிமாறும் போது கலந்து கொள்ளவும்
 23. பானிபூரி செய்ய:
 24. மைதா ,பேக்கிங் சோடா, மற்றும் பேக்கிங் பவுடர் ,உப்பு ,உளுந்து பொடி சேர்த்து கலந்து ஜலிக்கவும்
 25. பின் அதில் ரவை சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
 26. பின் சப்பாத்தி மாவு போல் தேய்த்து ரவுண்ட் மூடி அல்லது கட்டர் கொண்டு கட் செய்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
 27. குழம்பு செய்முறை:
 28. ஒரு மிக்ஸியில் பட்டை கிராம்பு ஏலக்காய் நறுக்கிய பச்சைமிளகாய் புதினா கொத்தமல்லி சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்
 29. பின் ஒரு கப் தண்ணீரில் கடலைமாவு மற்றும் அரிசி மாவு சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கரைத்து வைக்கவும்
 30. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை சேர்த்து கொடுத்துள்ள தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
 31. பின் அரைத்த பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்
 32. பின் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
 33. பின் கரைத்த மாவை ஊற்றி கலந்து மேலும் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
 34. நன்கு கொதித்து கெட்டியாக வரும் போது இறக்கவும்
 35. பேல்பூரி செய்முறை:
 36. ஒரு அகலமான பாத்திரத்தில் முதலில் பொரியை சேர்த்து கொள்ளவும்
 37. பின் மிளகாய்த்தூள் பொடியாக நறுக்கிய வெங்காயம் வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு கருப்பு உப்பு லெமன் சாறு கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து கொள்ளவும்
 38. பின் தேவையான அளவு குழம்பை ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்
 39. பரிமாறும் போது நறுக்கிய வெங்காயம் துருவிய கேரட் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்
 40. பட்டாணி மசாலா செய்முறை:
 41. பட்டாணி ஐ முதல் நாள் இரவே ஊற வைத்து பின் அதனை நன்கு கழுவி விட்டு குக்கரில் போட்டு 2 விசில் வந்ததும் இறக்கவும்
 42. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை வெங்காயம் மிளகாய் தூள் கறிமசால்தூள் மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்
 43. பின் சீரகத்தூள் கருப்பு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் பின் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து சுண்ட விடவும்
 44. பின் துருவிய கேரட் துருவிய மாங்காய் சேர்த்து வதக்கவும்
 45. பின் வேகவைத்த பட்டாணி சேர்த்து கலந்து இறக்கவும்
 46. பரிமாறும் போது கொத்தமல்லி தழை வெங்காயம் தூவி பரிமாறவும்
 47. காளான் மசாலா செய்முறை:
 48. ஒரு அகலமான பாத்திரத்தில் துருவிய முட்டை கோஸ் மற்றும் காளான் சேர்த்து சிறிது உப்பு மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
 49. பின் மைதா மற்றும் கார்ன்ப்ளார் 1/8 கப் சேர்த்து கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பக்கோடா பதத்தில் பிசிறி 1/2 மணி நேரம் ஊற விடவும்
 50. பின் சூடான எண்ணெயில் பக்கோடா வாக உதிர்த்து போட்டு பொரித்து எடுக்கவும்
 51. பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
 52. பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
 53. பின் துருவிய கேரட் சேர்த்து வதக்கவும்
 54. பின் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலா தூள் உப்பு சேர்த்து வதக்கவும்
 55. பின் சோயா சாஸ் தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும்
 56. பின் பொரித்த காளான் பக்கோடாவை சேர்த்து நன்கு கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி மூடி வைத்து கொதிக்க விடவும்
 57. நன்கு கொதிக்கும் போது ஒரு கப் தண்ணீரில் கார்ன்ப்ளார் மாவை கட்டியில்லாமல் கரைத்து ஊற்றி நன்கு கலந்து மீண்டும் கொதிக்க விடவும்
 58. நன்கு திரண்டு தளதளவென்று வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
 59. பரிமாறும் போது பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி பரிமாறவும்
 60. செஷ்வான் நூடுல்ஸ் செய்முறை:
 61. அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்க விடவும்
 62. பின் நூடுல்ஸை சேர்த்து 2 நிமிடங்கள் வரை வேகவிட்டு வடிகட்டி குளிர்ந்த நீர் விட்டு இரண்டு முறை அலசி பின் தாம்பாளத்தில் பரப்பி ஆறவிடவும்
 63. கொதிக்கும் நீரில் வரமிளகாய் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு பின் நீரை வடிகட்டி வைக்கவும்
 64. பின் அதனுடன் பூண்டு சேர்த்து நன்கு விழுதாக அரைத்து எடுக்கவும்
 65. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அரைத்த மிளகாய் பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
 66. பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் காய்கறிகள் சேர்த்து வதக்கவும்
 67. தீயை குறைத்து வைத்து வதக்கவும்
 68. பின் தக்காளி சாஸ் மற்றும் சோயா சாஸ் சேர்த்து வதக்கவும்
 69. பின் நூடுல்ஸை சேர்த்து நன்கு பிரட்டி விடவும்
 70. பின் அதை சூடாக பரிமாறவும்
 71. ஜிகர்தண்டா செய்முறை:
 72. பாதாம் பிசினை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்
 73. அடுப்பில் பாலை வைத்து கொதிக்க விடவும்
 74. கொதி வரும் போது தீயை குறைத்து விட்டு உதிர்த்த கோவா மில்க்மெயின்ட் மற்றும் ப்ரஷ் க்ரீம் சேர்த்து கலந்து சிறிது கொதிக்க விட்டு ஆறியதும் பிரிட்ஜில் வைத்து குளிரவிடவும்
 75. நன்னாரி தண்டை நன்கு தட்டி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
 76. பின் அதை வடிகட்டி வைக்கவும்
 77. வெறும் வாணலியில் சர்க்கரை சேர்த்து உருக்கவும்
 78. சர்க்கரை உருகி தேன் கலர் வந்ததும் நன்னாரி தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு தொடர்ந்து கிளறவும்
 79. நன்கு கரைந்து சிரப் போல் வரும் போது இறக்கி ஆறவைக்கவும்
 80. பரிமாறும் போது முதலில் ஒரு ஸ்பூன் நன்னாரி சிரப் ஊற்றி அதன் மேல் ஊறவைத்த பாதாம் பிசினை போட்டு மீண்டும் சிறிது நன்னாரி சிரப் ஊற்றவும்
 81. பின் குளிரவிட்ட பாலை ஊற்றி மேலே ஐஸ்கிரீம் வைத்து பரிமாறவும்
 82. பலுடா:
 83. சப்ஜா விதையை ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
 84. அடுப்பில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்
 85. கொதி வரும் போது சிறிது பாலை எடுத்து விட்டு கோவா மில்க்மெயின்ட் மற்றும் ப்ரஷ் க்ரீம் சேர்த்து மெல்லிய தீயில் வைத்து சிறிது கொதிக்க விட்டு இறக்கி ஆறியதும் ரோஸ் வாட்டர் கலந்து பிரிட்ஜில் வைத்து குளிரவிடவும்
 86. பின் சேமியாவை கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்து இறக்கி குளிர்ந்த நீர் விட்டு ஒன்றோடொன்று ஒட்டாமல் அலசி வைக்கவும்
 87. எடுத்து வைத்துள்ள பாலில் சிறிது சர்க்கரை கலந்து அதில் சேமியாவை சேர்த்து நன்கு கலந்து அதையும் குளிரவிடவும்
 88. பின் பரிமாறும் போது முதலில் கண்ணாடி டம்ளரில் ரோஸ் சிரப் ஊற்றி பின் நறுக்கிய ஆப்பிள் மற்றும் பொடித்த நட்ஸ்ஐ சேர்க்கவும்
 89. பின் ஊறவைத்த சப்ஜா விதையை சேர்க்கவும்
 90. பின் பாலுடன் கலந்து வைத்துள்ள சேமியாவை சேர்க்கவும்
 91. பின் தேவையான அளவு குளிர்ந்த பாலை சேர்த்து ஐஸ்கிரீம் உடன் பரிமாறவும்
 92. ரோஸ் மில்க்:
 93. ஒரு பிளன்டரில் காய்ச்சி குளிரவைத்த பாலுடன் ,ரோஸ் வாட்டர், சர்க்கரை ,மற்றும் மில்க்மெயின்ட் ,ரோஸ் சிரப் ,ப்ரஷ் க்ரீம் ,ஐஸ்கிரீம் ,சேர்த்து நன்கு ப்ளன்ட் பன்னி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்