வீடு / சமையல் குறிப்பு / சுகியன்
" சுகியன்" (Sukhiyan) தேவையான பொருட்கள் பச்சைப்பயறு - 1/2 கப் தேங்காய் - 1/2 மூடி திருவியது வெல்லம் - 3/4 கப் பொடித்தது ஏலக்காய் - 1/2 ஸ்பூண் பொடித்தது கோதுமை மாவு - 1 கப் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு செய்முறை : * பயரை சுத்தப்படுத்தி நீர் விட்டு வேக வைக்கவும். * பின்பு நீரை வடித்து விட்டு மிக்ஸியில் ஒன்று இரண்டாக பொடி செய்யவும்.(பாதி பருப்பு, பாதி மாவு போல் இருக்க வேண்டும்.) * மிக்ஸியில் தேங்காய் துருவல் போட்டு அரைத்து எடுக்கவும். * வெல்லத்தை நீர் விட்டு உருக்கி மண் இல்லாமல் வடிகட்டிக் கொள்ளவும். * மாவு,தேங்காய் துருவல், வெல்லம் மூன்றையும் ஒன்றாக கலந்து அடுப்பில் வைத்துக் கிளறவும்.(அடி கனமான பாத்திரத்தில் வைத்துக் கிளறவும்.) * கெட்டியாக வந்தவுடன் எடுத்து ஆற வைத்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும். * கோதுமை மாவை தோசை மாவு போல் கரைத்து வைக்கவும். * வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,உருண்டைகளை ஒவ்வொன்றாக கோதுமை மாவில் போட்டு முக்கி எடுத்து மெல்ல மெல்ல எண்ணையில் போட்டு பின் திருப்பிப் போட்டு பொரித்து எடுக்கவும்.
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க