வீடு / சமையல் குறிப்பு / நெத்தோலி ஃப்ரை
" நெத்தோலி ஃப்ரை " ( Anchovy Fry ) தேவையான பொருட்கள் நெத்தோலி மீன் - 500 கிராம் மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூண் மிளகாய் பொடி - 2 டேபிள் ஸ்பூண் பெப்பர் பொடி - 1 டீஸ்பூண் இஞ்சி விழுது - 1 டீஸ்பூண் பூண்டு விழுது - 1 டீஸ்பூண் கரம் மஸாலா - 1/4 டீஸ்பூண் லெமன் ஜூஸ் - 1 1/2 டீஸ்பூண் சோள மாவு (corn flour) -2 டேபிள் ஸ்பூண் மைதா மாவு - 1 டீஸ்பூண் அரிசி மாவு - 1 டீஸ்பூண் கறிவேப்பிலை - கொஞ்சம் உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - பொரிப்பதற்க்கு செய்முறை : * நெத்திலி மீனை கழுவி சுத்தமாக்கிக் கொள்ளவும். * சுத்தமாக்கிய மீனில் இஞ்சி விழுது, பூண்டு விழுது, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, பெப்பர் பொடி,கரம் மஸாலா பொடி, லெமன் ஜூஸ், தேவைக்கு உப்பு எல்லாம் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும். * இதனுடன் சோளமாவு,அரிசி மாவு,மைதா மாவு எல்லாம் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக மிக்ஸ் பண்ணி அரை மணி நேரம் வைக்கவும் * ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அந்த எண்ணெயில் கறிவேப்பிலையை பொரித்து எடுக்கவும். * தீயை மீடியம் ஃப்ளேமில் வைத்து அந்த எண்ணெயில் நெத்திலி மீனை போட்டு ஃப்ரை செய்து கிறிஸ்ப்பியானதும் எடுக்கவும். * பொரித்த நெத்திலி மீன் மீது பொரித்த கறிவேப்பிலை தூவவும்.
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க