வீடு / சமையல் குறிப்பு / மீன் குழம்பு

Photo of Meen Kulambu by Rashitha Mufeed at BetterButter
162
0
0.0(0)
0

மீன் குழம்பு

Mar-30-2019
Rashitha Mufeed
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மீன் குழம்பு செய்முறை பற்றி

Famous street food in chennai.Govindammal meen kadai famous curry .

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. புளி தண்ணீர் ஒரு கப்
  2.  3 மேசைக்கரண்டி எண்ணெய்
  3. 1/4 தேக்கரண்டி வெந்தயம்
  4. 1/4 தேக்கரண்டி கடுகு
  5. 1/4 தேக்கரண்டி உளுந்து
  6. ஒரு மேசைக்கரண்டி வடகம்
  7. வெங்காயம் 2
  8. தேவையான உப்பு
  9. தேவையான கொத்தமல்லி தழை
  10. தேவையான கருவேப்பிலை
  11. ஒரு பெரிய தக்காளி
  12. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  13. 1 1/2 +1/2தேக்கரண்டி மிளகாய் தூள்
  14. ஒரு கப் தண்ணீர்
  15. மீன் துண்டுகள் 8

வழிமுறைகள்

  1. முதலில் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீர் 1/2தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்
  2. பின்னர் ஒரு கடாயில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பின்னர் அதில் 1/4 தேக்கரண்டி வெந்தயம் 1/4 தேக்கரண்டி கடுகு 1/4 தேக்கரண்டி உளுந்து சேர்த்து நன்றாக வதக்கவும்
  3. பின் வெட்டி வைத்துள்ள இரண்டு வெங்காயத்தில் பாதியை சேர்த்து நன்றாக வதக்க.
  4. பின்னர் வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் ஒரு மேசைக்கரண்டி வடகம் சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. பின்னர் மீதமுள்ள வெங்காயம்,ஒரு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும்.
  6. தேவையான உப்பு சேர்த்து வேக விடவும்.
  7. நன்றாக வதங்கிய பின்னர் தேவையான கொத்தமல்லி தழை கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  8. பின்னர் ஒரு பெரிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
  9. பின்னர் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்,1 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும்.
  10. பின்னர் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி எடுக்கவும்.
  11. பின்னர் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
  12. நன்றாக கொதித்த பின்னர் கழுவி வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்
  13. சுவையான ரோட்டோர மீன் கறி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்