வீடு / சமையல் குறிப்பு / குல்பி மற்றும் கார்ன்

Photo of Kulfi with :corn: corn by sudha rani at BetterButter
73
0
0.0(0)
0

குல்பி மற்றும் கார்ன்

Mar-30-2019
sudha rani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

குல்பி மற்றும் கார்ன் செய்முறை பற்றி

ஷாப்பிங் போகும் போது காரசாரமாக மற்றும் இனிப்பா கார்ன் வாங்கி சாப்பிட்டு அப்படியே ஜில் ஜில் என்று குல்பிய ருசிக்க தந்தா எப்படி இருக்கும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • கிட்ஸ் ரெசிப்பிஸ்
 • தமிழ்நாடு
 • ஃப்ரீஸிங்
 • ஸ்நேக்ஸ்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. குல்பி செய்ய:
 2. பால் 1 லிட்டர்
 3. பால் பவுடர் 1/2 கப்
 4. மில்க்மெயின்ட் 1 கப்
 5. சர்க்கரை 1/4 கப்
 6. வெனிலா எசென்ஸ் சில துளிகள்
 7. சீவிய முந்திரி பாதாம் சிறிது
 8. கார்ன் செய்ய:
 9. வேகவைத்த கார்ன் 2 கப்
 10. பட்டர் 4 ஸ்பூன்
 11. சுகர் சிரப் 2 ஸ்பூன்
 12. மிளகாய்த்தூள் 1/4 ஸ்பூன்
 13. கரம் மசாலா தூள் 1/4 ஸ்பூன்
 14. சாட் மசாலா தூள் 1 சிட்டிகை
 15. கருப்பு உப்பு 1/4 ஸ்பூன்
 16. உப்பு தேவையான அளவு
 17. மல்லி புதினா சாறு 1/2ஸ்பூன்
 18. லெமன் சாறு 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

 1. குல்பி செய்முறை:
 2. பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்
 3. கொதித்து பாதியாக சுண்டி வரும் போது சர்க்கரை மற்றும் பால் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்
 4. பின் இறக்கி வைத்து நன்கு ஆறவிடவும்
 5. பின் மில்க்மெயின்ட் மற்றும் வெனிலா எசென்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்
 6. இந்த பதத்தில் இருக்க வேண்டும் பொதுவாக ஐஸ்கிரீம்க்கு சோள மாவு சேர்க்காமல் இருப்பது நல்ல ருசியை தரும் பாலை எந்த அளவுக்கு சுண்ட வெக்கறமோ அந்த அளவுக்கு ஐஸ்கிரீம் நல்லா இருக்கும்
 7. பின் அதை குட்டி மண்பானையில் நிரப்பி மேலே நட்ஸ் தூவி அலுமினிய பாயில் கொண்டு மூடி வைக்கவும்
 8. பின் பீரிசரில் இரவு முழுவதும் வைத்து செட் செய்யவும்
 9. விருப்பப்பட்டால் இதில் தேவையான அளவு ப்ரூட்ஸ் க்ரஷ் ஐ சேர்த்து விதவிதமான வண்ணங்களில் செய்து கொள்ளவும்
 10. கார்ன் செய்முறை:
 11. சூப்பர் மார்கெட்டில் உதிரியாக கிடைக்கும் அமெரிக்கன் கார்னை வாங்கி அப்படியே வேகவைத்து வைக்கவும்
 12. மசாலா கார்ன்:
 13. வாணலியில் பட்டர் விட்டு சூடானதும் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்
 14. பின் புதினா கொத்தமல்லி இலை சாறு ஊற்றி கலந்து கொண்டு வேகவைத்த கார்ன் சிறிது சேர்த்து கலந்து கொள்ளவும்
 15. பின் தேவையான அளவு உப்பு மற்றும் இந்து உப்பு சாட் மசாலா தூள் சேர்த்து பிரட்டி பரிமாறும் போது லெமன் சாறு பிழிந்து விடவும்
 16. இனிப்பு கார்ன் செய்ய:
 17. வாணலியில் பட்டர் விட்டு சூடானதும் வேகவைத்த கார்ன் மற்றும் சுகர் சிரப்பை ஊற்றி நன்கு கலந்து கொண்டு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்