வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் அல்வா

Photo of Coconut milk Alva by sudha rani at BetterButter
1106
0
0.0(0)
0

தேங்காய் பால் அல்வா

Mar-30-2019
sudha rani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
100 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் அல்வா செய்முறை பற்றி

கேரளா மாநிலம் திருச்சூர் ஸ்பெஷல் அல்வா மறக்கவே முடியாத சுவை நிச்சயமாக அதே அளவு ருசியைக் கொண்டு வர முடியவில்லை ஆனால் என்னுடைய சின்ன முயற்சி அதற்கு கிடைத்த பலன் 90 சதவீதம் கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • கேரளா
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. தேங்காய் 2
  2. கோதுமை மாவு 100 கிராம்
  3. சர்க்கரை 1/2 கிலோ+_ 1 கப்
  4. ஏலக்காய்த்தூள் 2 ஸ்பூன்
  5. தேங்காய் துண்டுகள் சிறிது
  6. கரகரப்பாக உடைத்த நட்ஸ் 1/4 கப்
  7. நெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. நல்ல வரக்காயா தேங்காயை தேர்ந்தெடுக்கவும்
  2. கோதுமை மாவுடன் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்
  3. தேங்காயை துருவி முதலில் ஐஸ்கட்டி சேர்த்து நன்கு அரைத்து பிழிந்து பால் எடுத்து வைக்கவும்
  4. பின் 1/4 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து மீண்டும் நன்கு அரைத்து 2_3 ம் பால் எடுத்து வைக்கவும் தண்ணீர் அதிகம் சேர்த்து பால் எடுக்க வேண்டாம்
  5. 3 ம் பாலுடன் பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவை சேர்த்து ஒரு 20 நிமிடங்கள் வரை ஊறவிடவும்
  6. பின் நன்கு பிசைந்து ஒரு மஸ்லின் துணியில் பிழிந்து பால் எடுக்கவும்
  7. அதனுடன் 2 ம் தேங்காய் பால் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து வைக்கவும்
  8. பின் 1 கப் சர்க்கரையை வாணலியில் சேர்த்து உருக விடவும்
  9. தேன் கலர் வரும் போது சிறிது தண்ணீர் சேர்த்து தொடர்ந்து நன்கு கிளறி கேரமல் சிரப் எடுத்து வைக்கவும்
  10. அடிகனமான வாணலியில் சர்க்கரை முதல் தேங்காய் பால் மற்றும் கோதுமை பால் விட்டு நன்கு கலந்து பின் மிதமான தீயில் கொதிக்க விடவும்
  11. தீயை வேகமாக வைத்தால் சீக்கிரம் பதம் வந்து விடும் அல்வா ருசியாக இருக்காது மிகவும் பொறுமையாக செய்ய வேண்டும்
  12. தேங்காய் பால் வேக வேக எண்ணெய் கசிந்து கொண்டே வரும் இதற்கு நெய் தேவையில்லை தட்டில் தடவ மட்டுமே நெய் பயன்படும்
  13. சரியாக ஒரு பத்து நிமிடத்தில் திக்காக வரும் அப்போது தீயை முழுவதுமாக குறைத்து தொடர்ந்து கிளறவும்
  14. நன்கு சுருண்டு வரும் போது ஏலத்தூள் கலந்து அதை இரண்டாக பிரித்து ஒரு பகுதியை கேரமல் உடன் கலந்து நன்கு தொடர்ந்து கிளறவும்
  15. மீதமுள்ள அல்வாவில் பாதி பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் மற்றும் கரகரப்பாக உடைத்த நட்ஸ் சேர்த்து கலந்து தட்டில் கொட்டி சமப்படுத்தி ஆறியதும் துண்டுகள் போடவும்
  16. கேரமல் கலந்த அல்வா சிறிது நேரத்தில் பதம் வரும் போது மீதமுள்ள தேங்காய் துண்டுகள் மற்றும் நட்ஸ்ஐ சேர்த்து நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி ஆறியதும் துண்டுகள் போடவும்
  17. கேரமல் சிரப் அதிக அளவு தண்ணீராக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்
  18. கோதுமை மாவை அதிகம் சேர்க்க வேண்டாம் ருசி நன்றாக இருக்காது
  19. நெய்யே இல்லாத ஒரு ருசியான அல்வா

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்