Photo of Mumbai Street Food Dahi Poori by Sumaiya shafi at BetterButter
522
1
0.0(0)
0

தஹி பூரி

Mar-30-2019
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தஹி பூரி செய்முறை பற்றி

மும்பை தெரு கடை ஸ்பெஷல் தஹி பூரி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பூரி செய்வதற்கு
  2. ரவை ஒரு கப்
  3. மைதா கால் கப்
  4. உப்பு தேவைக்கு ஏற்ப
  5. எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  6. பேக்கிங் சோடா ஒரு சிட்டிகை
  7. புதினா சட்னி செய்வதற்கு
  8. புதினா அரை கப்
  9. மல்லி இலை கால் கப்
  10. இஞ்சி ஒரு துண்டு
  11. பச்சை மிளகாய் 2
  12. உப்பு தேவைக்கு ஏற்ப
  13. ஸ்டாப்பிங் செய்வதற்கு
  14. உருளைக்கிழங்கு ஒன்று
  15. சிவப்பு மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன்
  16. சாட் மசாலா ஒரு டீஸ்பூன்
  17. உப்பு தேவைக்கு ஏற்ப
  18. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  19. தக்காளி 1 பொடியாக நறுக்கியது
  20. ஓமப்பொடியை 1 கப்
  21. தயிர் 1 கப்
  22. சர்க்கரை 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பௌலில் மைதா, ரவை, உப்பு ,எண்ணெய் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்
  2. பிசைந்த மாவை சப்பாத்தி போல் திரட்டி சிறிய வட்டமாக செய்து கொள்ளவும்
  3. பின்பு பொரித்து எடுத்துக் கொள்ளவும்
  4. பின் தயிரை சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்
  5. புதினா, மல்லி இலை,உப்பு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  6. உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  7. பின் அதில் சிவப்பு மிளகாய் தூள்,உப்பு, மல்லி இலை மற்றும் சாட் மசாலா சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  8. பூரியின் மேல் லேசாக உடைத்து பிசைந்த உருளைகிழங்கை அதில் வைக்கவும்
  9. பின் வெங்காயம், புதினா சட்னி, ஓமப்பொடி, தயிர் எல்லாவற்றையும் ளேயராக சேர்க்கவும்.
  10. கடைசியில் அடித்த தயிரை மறுபடியும் அதன்மேல் ஊற்றி சிவப்பு மிளகாய் தூள் மற்றும் சாட் மசாலா தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்