Photo of Mumbai Street Food Spl Pani Puri by Sumaiya shafi at BetterButter
996
1
0.0(0)
0

பானி பூரி

Mar-30-2019
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பானி பூரி செய்முறை பற்றி

மும்பை தெரு கடை ஃபேமஸ் பானி பூரி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பூரி செய்வதற்கு
  2. ரவா ஒரு கப்
  3. மைதா கால் கப்
  4. எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  5. உப்பு தேவைக்கு ஏற்ப
  6. பேக்கிங் சோடா ஒரு சிட்டிகை
  7. பூரியின் பாணி செய்வதற்கு
  8. புதினா அரை கப்
  9. மல்லி இலை கால் கப்
  10. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  11. பச்சை மிளகாய் ஒன்று
  12. புளி சட்னி செய்வதற்கு
  13. புளி இரண்டு எலுமிச்சை அளவு
  14. வெல்லம் 1/4 கப்
  15. சர்க்கரை 3 டீஸ்பூன்
  16. சாட் மசாலா 2 டீஸ்பூன்
  17. உப்பு தேவைக்கேற்ப
  18. உருளைக்கிழங்கு செய்வதற்கு
  19. உருளைக்கிழங்கு 2 வேக வைத்து மசித்து
  20. சிவப்பு மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன்
  21. சீரகத்தூள் அரை டீஸ்பூன்
  22. சாட் மசாலா அரை டீஸ்பூன்
  23. உப்பு தேவைக்கேற்ப
  24. மல்லி இலை சிறிதளவு
  25. வெங்காயம்-1 பொடியாக நறுக்கியது
  26. ஓம் அப்படி அரை கப்

வழிமுறைகள்

  1. முதலில் மைதா, ரவை, பேக்கிங் சோடா, உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. பின் சப்பாத்தி போல் அதை தட்டி சிறிய வட்டமான வடிவில் செய்து கொள்ளவும்
  3. பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கவும்
  4. புதினா மல்லி இலை இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
  5. அரைத்த கலவையை வடித்து தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கவும்
  6. அதில் உப்பு மற்றும் சாட் மசாலா சேர்த்து கலக்கவும்
  7. புளி சட்னி செய்வதற்கு
  8. புளியை இரண்டு கிளாஸ் தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும்
  9. கொதித்தபின் கொட்டை நீக்கி ஆற வைத்து அரைக்கவும்
  10. பின் அதில் சர்க்கரை, உப்பு மற்றும் சாட் மசாலா சேர்த்து கலக்கவும்
  11. உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து மசித்துக் கொள்ளவும்
  12. பின் அதில் சிவப்பு மிளகாய் தூள், சாட் மசாலா,உப்பு மற்றும் சீரகத்தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  13. இப்பொழுது பொரித்த பூரியின் மேல் சிறிய ஓட்டை போட்டுக் கொள்ளவும்
  14. அதில் மசித்து வைத்த உருளைக்கிழங்கு வெங்காயம் மற்றும் ஓமம் பொடி சேர்க்கவும்
  15. பின் புளி சட்னி மற்றும் புதினா சட்னி ஊற்றி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்