வீடு / சமையல் குறிப்பு / பாலக் கீரை வடை

Photo of Keera vada by Deepa Srivatsan at BetterButter
335
0
0.0(0)
0

பாலக் கீரை வடை

Mar-31-2019
Deepa Srivatsan
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பாலக் கீரை வடை செய்முறை பற்றி

தெருவோரங்களில் விற்கப்படும் பாலக் கீரை வடை தேங்காய் சட்னியுடன் மிகவும் சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாலக் கீரை அரை கட்டு
  2. கடலைப் பருப்பு கால் கிலோ
  3. பட்டாணி பருப்பு கால் கிலோ
  4. வெங்காயம் 2 பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்
  5. மிளகாய்வற்றல் 5
  6. பச்சை மிளகாய் 3 பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்
  7. உப்பு தேவையான அளவு
  8. பெருங்காயம் அரை டீஸ்பூன்
  9. எண்ணை பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. பட்டாணி பருப்பு கடலைப் பருப்பு ஆகியவற்றை 2 மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் மிளகாய் வற்றல் உப்பு பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
  2. பாலக்கீரையை பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்
  3. அரைத்து வைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய பாலக் கீரை பச்சை மிளகாய் வெங்காயம் ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்க வேண்டும்
  4. வாணலியில் எண்ணெய் விட்டு அது சூடானதும் சிறு சிறு வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்
  5. தேங்காய் சட்னியுடன் பரிமாற வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்