வீடு / சமையல் குறிப்பு / மும்பை தெரு சாந்விச்

Photo of Mumbai Street sandwich by Sarojam Arumugam at BetterButter
237
0
0.0(0)
0

மும்பை தெரு சாந்விச்

Mar-31-2019
Sarojam Arumugam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மும்பை தெரு சாந்விச் செய்முறை பற்றி

மும்பை தெருகளில் மிக பிரபலமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காளான் 200gm
  2. இஞ்சி பூண்டுவிழுது 1tsp
  3. வெங்காயம் பொடியாக நறுக்கி யதும் 1
  4. தக்காளி பொடியாக நறுக்கியது 2
  5. வெங்காயம் நீளமாக நறுக்கியது 1
  6. தக்காளி நீளமாக நறுக்கி யது 1
  7. மிளகாய் தூள் 1 1/2tsp
  8. மல்லி தூள் 1tsp
  9. மஞ்சள் தூள் 1/4tsp
  10. கரம் மசாலா தூள் 1/2tsp
  11. உப்பு
  12. சாட் மசாலா 1/2 tsp
  13. மிளகு தூள் 1/2tsp
  14. மோசிறல சீஸ் 100 gm
  15. வெள்ளரிக்காய் வட்டமாக நறுக்கியது 1
  16. உருளைக்கிழங்கை வேக வைத்து வட்டமாக நறுக்கி யது 1
  17. மல்லி இலை 1கப்
  18. சப்பாத்தி 5

வழிமுறைகள்

  1. மல்லி இலை தக்காளி பகுதி பச்சை மிளகாய் உப்பு சேர்த்து நன்றாக சட்னியாக அரைத்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் சூடு பண்ணி கொத்தி அரிந்த வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கவும்
  3. பொடியாக நறுக்கிய தக்காளி சேர்க்கவும்
  4. நன்றாக வதங்கியதும் மல்லி பொடி மிளகாய் பொடி கரம் மசாலா மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்
  5. பொடியாக நறுக்கிய மஷ்ரூம் சேர்த்து அடைத்து வைத்து சின்ன தீயில் நன்றாக வேக வைத்து எடுக்கவும்
  6. ஒரு சப்பாத்தி எடுத்து அதில் சட்னி தடவவும்
  7. அதன் மீது வட்டமாக அரிந்து வேக வைத்த உருளைக்கிழங்கை வைக்கவும்
  8. அதன் மீது துருவிய சீஸ் போடவும்
  9. அதன் மீது இன்னொரு சப்பாத்தி வைக்கவும்
  10. அந்த சப்பாத்தி மீது மஷ்ரூம் கலவையை வைத்து துருவிய சீஸை போடவும்
  11. அதன் மீது இன்னொரு சப்பாத்தியை வைத்து சட்னியை நன்றாக தேய்க்கவும்
  12. அதன் மீது வட்டமாக நறுக்கிய தக்காளியை வைத்து துருவிய சீஸை போடவும்
  13. இன்னொரு சப்பாத்தி அதன் மீது வைக்கவும்
  14. அதன் மீது வட்டமாக நறுக்கிய வெள்ளரிக்காய் பூ வைத்து உப்பு மிளகு தூள் போட்டு துருவிய தேன் போடவும்
  15. அதன் மீது இன்னொரு சப்பாத்தி வைத்து நன்றாக கையால் அழுத்தி வைக்கவும்
  16. ஒரு தவா சூடு பண்ணி அதன் மீது நெய் ஒரு தேக்கரண்டி ஊற்றவும்
  17. மெயின் மீது அடுக்கிய சப்பாத்தி வைத்து ஒரு மூடியால் மூடி வைத்து இளம் தீயில் வேக வைக்கவும்
  18. ஐந்து நிமிடத்துக்கு அப்புறம் திருப்பிப் வைத்து மூடி வைத்து வேக வைக்கவும்
  19. சூடான சான்விச் தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்